சேர்த்து எழுதுக

serthu yeluthuga in tamil

தமிழ் பரீட்சையில் அதிகம் கேட்கப்படும் வினாக்களில் சேர்த்து எழுதுதலும் ஒன்றாகும். இந்த பதிவில் உள்ளவை பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்றுக்கொள்ள உதவியாக இருக்கும்.

சேர்த்து எழுதுக

தேயிலை+நீர் தேநீர்
ஆறு+நீர் ஆற்றுநீர்
பல்+பொடி பற்பொடி
மலை+உச்சி மலையுச்சி
மரம்+வேர் மரவேர்
முள்+செடி முட்செடி
தமிழ்+சொல் தமிழ்ச்சொல்
மண்+குடம் மட்குடம்
மலர்+செண்டு மலர்ச்செண்டு
வடக்கு+கிழக்கு வடகிழக்கு
பச்சை+கிளி பச்சைக்கிளி
மனம்+மாற்றம் மனமாற்றம்
தேன்+மொழி தேன்மொழி
வாழை+காய் வாழைக்காய்
மா+தோப்பு மாந்தோப்பு
கரிய+மேகம் கார்மேகம்
செம்மை+தாமரை செந்தாமரை
பூ+தோட்டம் பூந்தோட்டம்
திரை+படம் திரைப்படம்
உன்னை+தவிர உன்னைத்தவிர

1. கணினி+தமிழ் சேர்த்து எழுதுக

 • கணினித்தமிழ்

2. எட்டு+திசை சேர்த்து எழுதுக

 • எட்டுத்திசை

3. சிலம்பு+அதிகாரம் சேர்த்து எழுதுக

 • சிலப்பதிகாரம்

4. நிலவு+என்று சேர்த்து எழுதுக

 • நிலவென்று

5. தமிழ்+எங்கள் சேர்த்து எழுதுக

 • தமிழெங்கள்

6. இடம்+புறம் சேர்த்து எழுதுக

 • இடப்புறம்

7. பாட்டு+இருக்கும் சேர்த்து எழுதுக

 • பாட்டிருக்கும்

8. நிலா+ஒளி சேர்த்து எழுதுக

 • நிலவொளி

9. முத்து+சுடர் சேர்த்து எழுதுக

 • முத்துச்சுடர்

10. தரை+இறங்கும் சேர்த்து எழுதுக

 • தரையிறங்கும்

11. ஏன்+என்று சேர்த்து எழுதுக

 • ஏனென்று

12. இல்லாது+இயங்கும் சேர்த்து எழுதுக

 • இல்லாதியங்கும்

13. மருத்துவம்+துறை சேர்த்து எழுதுக

 • மருத்துவத்துறை

14. ஔடதம்+ஆம் சேர்த்து எழுதுக

 • ஔடதமாம்

15. நீலம்+வான் சேர்த்து எழுதுக

 • நீலவான்

16. செயல்+இழக்க சேர்த்து எழுதுக

 • செயலிழக்க

17. ஆழம்+கடல் சேர்த்து எழுதுக

 • ஆழக்கடல்

18. வாழை+இலை சேர்த்து எழுதுக

 • வாழையிலை

19. பயன்+இலா சேர்த்து எழுதுக

 • பயனில்லா

20. கலம்+ஏறி சேர்த்து எழுதுக

 • கலமேறி

21. பெருமை+வானம் சேர்த்து எழுதுக

 • பெருவானம்

22. வணிகம்+சாத்து சேர்த்து எழுதுக

 • வணிகச்சாத்து

23. அடிக்கும்+அலை சேர்த்து எழுதுக

 • அடிக்குமலை

24. பெருமை+அறிவு சேர்த்து எழுதுக

 • பெருமறிவு

25. தம்+உயிர் சேர்த்து எழுதுக

 • தம்முயிர்

You May Also Like:

பிரித்து எழுதுக

ஆண்பால் பெண்பால் சொற்கள்