தமிழ் பரீட்சையில் பிரித்து எழுதும் பிரிவானது முக்கியமானது. ஏனென்றால் அதிகமான பரீட்சையில் இந்த பிரித்து எழுதும் கேள்விகள் கேட்கப்படுகின்றன. இந்த பதிவில் முக்கியமான சொற்களின் பிரித்து எழுதும் முறை தரப்பட்டுள்ளன.
பிரித்து எழுதுக
செந்தமிழ் | செம்மை + தமிழ் |
செங்கல் | செம்மை + கல் |
மகிழ்ச்சியடைந்தான் | மகிழ்ச்சி + அடைந்தான் |
ஒலியெழுப்பி | ஒலி + எழுப்பி |
பழந்தமிழ் | பழமை + தமிழ் |
தமிழ்த்தாய் | தமிழ் + தாய் |
தொலைபேசி | தொலை + பேசி |
கடலலை | கடல் + அலை |
பாலாடை | பால் + ஆடை |
உள்ளூர் | உள் + ஊர் |
பனையோலை | பனை + ஓலை |
அதாவது | அது + ஆவது |
மட்கலம் | மண் + கலம் |
பொற்குடம் | பொன் + குடம் |
கண்ணீர் | கண் + நீர் |
நான்மறை | நான்கு + மறை |
மாங்காய் | மா + காய் |
கற்றூண் | கல் + தூண் |
மரவேர் | மரம் + வேர் |
பைந்தமிழ் | பசுமை + தமிழ் |
செங்கோல் | செம்மை + கோல் |
பொறியியல் | பொறி + இயல் |
மூவேந்தர் | மூன்று + வேந்தர் |
பேரழகு | பெருமை + அழகு |
அப்பக்கம் | அ + பக்கம் |
கடற்கரை | கடல் + கரை |
முதுமக்கள் | முதுமை + மக்கள் |
அன்புடைமை | அன்பு + உடமை |
கருங்கோல் | கருமை + கோல் |
கருமுகில் | கருமை + முகில் |
புறநானுறு | புறம் + நான்கு + நூறு |
அகநானுறு | அகம் + நான்கு + நூறு |
தேனருவி | தேன் + அருவி |
மலரடி | மலர் + அடி |
நம்மூர் | நம் + ஊர் |
ஈராண்டு | இரண்டு + ஆண்டு |
ஈராறாண்டு | இரண்டு + ஆறு + ஆண்டு |
ஈரெட்டாண்டு | இரண்டு + எட்டு + ஆண்டு |
ஐயைந்தாய் | ஐந்து + ஐந்து + ஆய் |
மூவைந்தாய் | மூன்று + ஐந்தாய் |
வெண்சங்கு | வெண்மை + சங்கு |
தொல்நெறி | தொன்மை + நெறி |
நெடுங்கடல் | நெடுமை + கடல் |
இன்சுவை | இனிமை + சுவை |
வெண்சிலை | வெண்மை + சிலை |
இன்மொழி | இனிமை + மொழி |
வெறுங்கனவு | வெறுமை + கனவு |
கொடுங்கோல் | கொடுமை + கோல் |
நன்கலம் | நன்மை + கலம் |
இயற்றமிழ் | இயல் + தமிழ் |
கலம்பகம் | கலம் + பகம் |
நானிலம் | நான்கு + நிலம் |
ஆழ்கடல் | ஆழம் + கடல் |
பல்லுயிர் | பல + உயிர் |
பெருநாள் | பெருமை + நாள் |
தண்ணீர் | தண்மை + நீர் |
பசும்பொற்சுடர் பிரித்து எழுதுக
பசுமை + பொன் + சுடர்
செந்தமிழ் பிரித்து எழுதுக
செம்மை + தமிழ்
என்பிலதனை பிரித்து எழுதுக
என்பு + இலதனை
ஈரிருவர் பிரித்து எழுதுக
இரு + இருவர்
பன்னிரண்டு பிரித்து எழுதுக
பத்து + இரண்டு
கலம்பகம் பிரித்து எழுதுக
கலம்பு + அகம்
கசடற பிரித்து எழுதுக
கசடு + அற
புத்துயிரூட்டி பிரித்து எழுதுக
புத்துயிர் + ஊட்டி
திருவருட்பா பிரித்து எழுதுக
திரு + அருள் + பா
தண்ணீர் பிரித்து எழுதுக
தண்மை + நீர்
அனைத்துண்ணி பிரித்து எழுதுக
அனைத்து + உண்ணி
பொறையுடைமை பிரித்து எழுதுக
பொறை + உடமை
இவ்விரண்டும் பிரித்து எழுதுக
இ + இரண்டும்
அக்காட்டில் பிரித்து எழுதுக
அ + காட்டில்
இருதிணை பிரித்து எழுதுக
இரண்டு + திணை
வண்கீரை பிரித்து எழுதுக
வண்மை + கீரை
இன்சொல் பிரித்து எழுதுக
இனிமை + சொல்
நானிலம் பிரித்து எழுதுக
நான்கு + நிலம்
விண்வெளி பிரித்து எழுதுக
விண் + வெளி
பெருங்கடல் பிரித்து எழுதுக
பெருமை + கடல்
குருத்தோலை பிரித்து எழுதுக
குருத்து + ஓலை
குற்றியலிகரம் பிரித்து எழுதுக
குறுமை + இயல் + உகரம்
பேராசிரியர் பிரித்து எழுதுக
பெருமை + ஆசிரியர்
காட்டாறு பிரித்து எழுதுக
காடு + ஆறு
அளபெடை பிரித்து எழுதுக
அளபு +எடை
சீரிளமை பிரித்து எழுதுக
சீர்மை + இளமை
அக்களத்து பிரித்து எழுதுக
அ + களத்து
கோட்டோவியம் பிரித்து எழுதுக
கோடு + ஓவியம்
தட்பவெப்பம் பிரித்து எழுதுக
தட்பம் + வெப்பம்
இடப்புறம் பிரித்து எழுதுக
இடது + புறம்
தன்னாடு பிரித்து எழுதுக
தன் + நாடு
என்றென்றும் பிரித்து எழுதுக
என்று + என்றும்
மின்னணு பிரித்து எழுதுக
மின் + அணு
ஆழக்கடல் பிரித்து எழுதுக
ஆழம் + கடல்
அங்கை பிரித்து எழுதுக
அகம் + கை
நன்செய் பிரித்து எழுதுக
நன்மை + செய்
நற்றமிழ் பிரித்து எழுதுக
நன்மை + தமிழ்
அமுதென்று பிரித்து எழுதுக
அமுது + என்று
ஈரிருவர் பிரித்து எழுதுக
ஈர் + இருவர்
பாடறிந்து பிரித்து எழுதுக
பாடு + அறிந்து
வெற்றிலை பிரித்து எழுதுக
வெறுமை + இலை
மற்போர் பிரித்து எழுதுக
மல் + போர்
நற்பயன் பிரித்து காட்டு
நன்மை + பயன்
பாகற்காய் பிரித்து எழுதுக
பாகு + அல் + காய்
மூதுரை பிரித்து எழுதுக
மூத்தோர் + உரை
பல்லாண்டு பிரித்து எழுதுக
பல + ஆண்டு
வல்லுருவம் பிரித்து
வன்மை + உருவம்
அவ்வுருவம் பிரித்து
அ + உருவம்
பெருவெள்ளம் பிரித்து
பெருமை + வெள்ளம்
முத்தமிழ் பிரித்து எழுதுக
மூன்று + தமிழ்
காலாட்படை பிரித்து எழுதுக
கால் + ஆள் + படை
You May Also Like: