ஆண்பால் பெண்பால் சொற்கள்

aan paal pen pal in tamil

தமிழில் ஆண்பால் மற்றும் பெண்பால் சொற்கள் என்பது அனைத்து சொற்களுக்கும் உண்டு. ஆனாலும் சில சொற்களுக்கு ஆண்பால் மற்றும் பெண்பால் சொற்கள் குழப்பமாகவே உள்ளது.

எடுத்துக்காட்டாக மன்னன் என்ற சொல்லிற்கான பெண்பால் சொல் குழப்பமாவே உள்ளது. “மன்னி”, “மன்னினி” என்று கூறினாலும் குழப்பமாவே உள்ளது.

அதேபோன்று புலவன் என்ற சொல்லிற்கான பெண்பால் சொல்லினையும் அறிய கடினமாகவே உள்ளது.

சொல்வளம் நிறைந்த தமிழ்மொழியில் கண்டிப்பாக இவை அனைத்திற்கும் சொற்கள் இருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

ஆண்பால் பெண்பால் சொற்கள்

ஆண்பால்பெண்பால்
அரசன் அரசி
அழகன் அழகி
மகன் மகள்
வீரன் வீராங்கனை
வாலிபன் வாலை
நம்பி நங்கை
தனயன் தனயை
பாட்டன் பாட்டி
தமயன் தமக்கை
ஒருவன் ஒருத்தி
இறைவன் இறைவி
மணவாளன் மணவாட்டி
திருவாளன் திருவாட்டி
கண்ணாளன் கண்ணாட்டி
பெருமான் பெருமாட்டி
சீமான் சீமாட்டி
அப்பா அம்மா
தாத்தா பாட்டி
தலைவன் தலைவி
சிறுவன் சிறுமி
இளைஞன் யுவதி
பேரன் பேத்தி
திருடன் திருடி
நடிகன் நடிகை
நிபுணன் நிபுணி
குறவன் குறத்தி
பாடகன் பாடகி
ஆசிரியன் ஆசிரியை
மருத்துவன் மருத்துவிச்சி
வஞ்சகன் வஞ்சகி
பண்டிதன் பண்டிதை
வேலைக்காரன் வேலைக்காரி
தமிழன் தமிழிச்சி
சிவன் பார்வதி
கலைஞன் கலைஞி

ரசிகை ஆண்பால் பெண்பால்

ஆண்பால் பெண்பால்
ரசிகன் ரசிகை

தேவதை ஆண்பால் பெண்பால்

ஆண்பால் பெண்பால்
தேவன் தேவதை

கவிஞன் ஆண்பால் பெண்பால்

ஆண்பால்பெண்பால்
கவிஞன் கவிஞி, கவிஞை

குரு ஆண்பால் பெண்பால்

ஆண்பால்பெண்பால்
குரு குருபத்தினி

கள்வன் ஆண்பால் பெண்பால்

ஆண்பால்பெண்பால்
கள்வன், கள்ளன் கள்ளி

ஓவியன் ஆண்பால் பெண்பால்

ஆண்பால்பெண்பால்
ஓவியன் ஓவியை

மனிதன் ஆண்பால் பெண்பால்

ஆண்பால்பெண்பால்
மனிதன் மனிதி

பேரன் ஆண்பால் பெண்பால்

ஆண்பால்பெண்பால்
பேரன் பேத்தி

வேடன் ஆண்பால் பெண்பால்

ஆண்பால்பெண்பால்
வேடன் வேடிச்சி

புதல்வன் ஆண்பால் பெண்பால்

ஆண்பால்பெண்பால்
புதல்வன் புதல்வி

பாணன் ஆண்பால் பெண்பால்

ஆண்பால்பெண்பால்
பாணன் பாடினி, விறலி

பக்தன் ஆண்பால் பெண்பால்

ஆண்பால்பெண்பால்
பக்தன் பக்தை

விதவை ஆண்பால் பெண்பால்

ஆண்பால்பெண்பால்
தபுதாரன் விதவை

உழவன் ஆண்பால் பெண்பால்

ஆண்பால்பெண்பால்
உழவன் உழத்தி

You May Also Like:

அனுப்புனர் அனுப்புநர் எது சரி

வாழ்த்துகள் வாழ்த்துக்கள் எது சரி