கனடாவில் ஐந்து பிள்ளைகளுடன் அரசாங்க வீட்டுத் திட்டத்தில் வசித்து வந்த குடும்பத்தினர் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்த குடும்பத்தினர் வீட்டில் இருந்த போது அதிகளவு சத்தம் எழுப்பியதாக குற்றம் சுமத்தப்பட்டு கனடாவின் ரெஜினா பகுதியை சேர்ந்த தந்தையொருவரும் அவரது ஐந்து பிள்ளைகளும் இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் குறித்த குடும்பம் குறுகிய அறிவித்தலின் அடிப்படையில் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
நடு வீதியில் நிர்க்கதியாக்கப்பட்ட குடும்பம்
கனடா அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையினால் குறித்த குடும்பம் நடு வீதியில் நிர்க்கதியாக்கப்பட்டுள்ளதாக குறித்த குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
குடியிருப்புக்கான வாடகை மற்றும் மின்சாரக் கட்டணம் போன்றன உரிய முறையில் செலுத்தி இருந்த போதிலும் குழந்தைகள் வீட்டில் அதிகளவு சத்தம் எழுப்பப்படுவதாகத் தெரிவித்தே இவ்வாறு குறித்த குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.