இந்தியன் வசூல் எத்தனை கோடி தெரியுமா?

கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் படம் மீண்டும் நேற்று தியேட்டர்களில் ரீரிலீஸ் ஆனது. கமலுடன் இணைந்து , மனிஷா கொய்ராலா, சுகன்யா, ஊர்மிளா, நாசர், நெடுமுடி வேணு, கவுண்டமணி மற்றும் செந்தில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

ஏ. எம். ரத்னம் தயாரிப்பில் உருவான இத்திரைப்படத்தை ஸ்ரீ சூர்யா மூவீஸ் வெளிவிட்டது. இப் படத்திற்கு ஏ. ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் 1995-ல் வெளியான பாட்ஷா பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது.

இது கமல்ஹாஸன் இரட்டை வேடத்தில் நடித்து பெரிதும் வெற்றிபெற்ற திரைப்படமாகும். சுதந்திரப் போராட்ட தியாகியாகவும் அவரது மகன் சந்துருவாகும் கமல்ஹாசன் நடித்துள்ளார்.

திரைப்படத்தின் ஆரம்பம் முதலே வர்மக்கலை மூலம் பாரிய குற்றங்கள் புரிபவர்கள் கொலை செய்யப்படுகின்றனர். இதை ஆராய்ந்த காவற்துறையினர் வர்மக் கலையினை அறிந்த ஒருவரே இதை நிகழ்த்தியிருப்பதாக அறிந்து தகவற் தளத்தில் தேடியபோது திருமுல்லைவாயிலில் இவ்வாறான கலையைக் கற்ற ஓர் சுதந்திரப் போராட்ட தியாகி இருப்பதை அறிந்து அவ்விடத்தில் காவற்துறையினர் செல்கின்றனர்.

இந்தியன் அங்கிருந்து டிராக்டர் வண்டி மூலம் தப்பிச் செல்கின்றார். இந்தியனின் மகள் ஒருமுறை உடற் சுகவீனமற்றுப் போனபோது மருத்துவமனையில் பணமின்றி அனுமதிக்கமுடியாமல் போதிய பராமரிப்பு ஏதும் இன்றி இறந்து போகின்றார்.

பிணத்தை வைத்தியசாலையில் இருந்து வீடு கொண்டு செல்வதற்கு கூட இலஞ்சம் இன்றி பலவேறு இன்னல்களுக்கு உள்ளாகின்றார். இதனால் மனம் வருந்தி சந்துரு பட்டணத்திற்குப் பிழைப்புத் தேடிவருகின்றார். பட்டணத்தில் ஏனையவர்கள் போலவே இலஞ்சம் வேண்டி சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குகின்றார்.

ஒரு பேருந்து மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்தும் பெருந்தொகை பணத்தை இலஞ்சமாக சந்துருவிற்கு கொடுத்து அனுமதியைப் பெறுகின்றது. இவ்வண்டி பின்னர் பாடசாலைச் சிறார்களுடன் சென்றபோது வாகன பிரேக் இன்றிச் சென்று விபத்துக் குள்ளாகின்றது.

இதனுடன் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகளுக்கு ஒருதொகைப் பணத்தைக் கையூட்டாகப் (இலஞ்சம்) கொடுத்து வழக்கில் இருந்து தப்பிக்கின்றார். இச்செயல்களால் ஆத்திரம் அடைந்த இந்தியன் இறுதியில் தனது மகன் சந்துருவைக் கொலை செய்வதுடன் திரைப்படம் முடிவுறுகின்றது.

இவ்வாறு இருக்க நேற்றைய தினம் இந்தியன் படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. இவ்வாறு இருக்க இந்தியன் படம் 1.1 கோடி வசூலை பெற்றுள்ளது. இருப்பினும் கில்லி படத்தை இது தாண்டவில்லை.

இந்தியன் 2 படமும் வரும் ஜூலை 12 ம் திகதி வெளியாகவுள்ளது. இது எந்தளவிற்கு ரசிகர்கள் மதத்தியில் வரவேற்பை பெறுகின்றது என்றுபோருத்திருந்து பார்ப்போம்.

more news