விடுதலை 2 ரிலீஸ் எப்போ தெரியுமா?

சூரி நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான படம் தான் விடுதலை. இந்த படத்தில் விஜய்சேதுபதியும் முக்கிய வேடத்தில் நடித்திருப்பார். இந்த படத்தில் சூரி இவ்வாறு நடிப்பார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.

ஒரு காமெடியன் திடீரென கீரோவாக மாறியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அந்த படத்திற்கு தேசிய விருது கிடைத்திருக்க வேண்டும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இவர் தனக்கு கிடைத்த வாய்ப்பை நன்றாகவே பயன் படுத்திக்கொண்டாரர். இதனை தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகின்றார். தற்போது கருடன் படம் வெளியானது. 3 நாட்டகளில் மட்டும் 18 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. இன்று வரைக்கும் திரையரங்குகள் நிரம்பி வழிகின்றது.

துரை செந்தில் இயக்கத்தில் சூரியின் நடிப்பில் வெளியான படம் தான் கருடன். இதில் சசிகுமார், உன்னிமுகூந்தன் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தனர்.

வழக்கமாக தமிழ் சினிமமாவில் கிரோவை வைத்து கதை எழுதுவார்கள். ஆனால் இது கதைக்கு முக்கியதுவம் கொடுத்து அதற்கேற்ற நடிகரை தெரிவு செய்துள்ளனர். இது ஒரு ஆக்ஷன் படமாக அமைதிருந்தாலும் சூரியின் நடிப்பு மிகவும் நன்றாகவே இருந்தது.

இவ்வாறு இருக்க விடுதலை படம் ரிலீஸ் ஆன போதே விடுதலை 2 படமும் வெளியாகும் என அறிவிக்கபட்டது. அதற்கான பணிகள் நடைபெற்று கொண்டு இருக்கிறது. இந்த படம் எடுப்பதற்கு கிட்ட தட்ட ஒரு வருடங்கள் ஆகி விட்டது.

சூரி அளித்த பேட்டி ஒன்றில் விடுதலை 2 ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று கூறியுள்ளார்.

more news