தமிழ் சின்னிமாவில் முன்னணி நடிகர்களில் ராகவா லாரன்ஸும் ஒருவர். இவருக்கு சிறுவயதிலே மூலையில் கட்டி இருந்தது. அதை குணப்படுத்த முடியாது என வைத்தியர்கள் கூறிவிட்டனர். அதன் பின்னர் ராகவேந்திரா சுவாமிகளை வணங்க அவருடைய நோயும் குணமாகி விட்டது.
இதனால் அவர்மீது இருந்த பக்தியினால் தன்னுடைய பெயரை ராகவா என மாற்றி கொண்டார். தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்திற்கும் ராகவேந்திரா என்றே பெயர் வைத்துள்ளார். இவர் நடிகராக, நடன இயக்குனராக, தயாரிப்பாளராக மட்டுமல்லாது ஒரு நல்ல சமூக சேவையாளராகவும் பணியாற்றி வருகின்றார்.
முனி படத்தின் இரண்டாம் பாகமாக காஞ்சனா படம் வெளியானது. அது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில் தொடர்ந்து காஞ்சனா2, காஞ்சனா3 என வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இப் படங்களின் கதை, இயக்கம், தயாரிப்பு என அனைத்து பணிகளியும் ராகவா லாரன்ஸ் செய்து வருகின்றார். இவர் அதிலும் நடித்து வருகின்றார்.
இவ்வாறு இருக்க தற்போது காஞ்சனா4 இற்கான ஆடிசன் நடைபெற்று வருகின்றாரது. காஞ்சனா பாகம் ஒன்றில் இவருடன் சரத்குமார், கோவை சரளா, லட்சுமி ராஜ், தேவதர்ஷினி போன்றோர் நடித்திருப்பார். அதுவும் லரான்சின் அம்மாவாக கோவை சரளா நடித்தது தான் இந்த படங்களுக்கு பிளஸ் .
காஞ்சனா 2 இல் ராகவா லாரன்ஸ் உடன் டாப்ஸி, நித்யா மேனன், கோவை சரளா, ரேணுகா, மனோபாலா மற்றும் பல நடிகர்கள் நடித்திருனர். காஞ்சனா3 இல் ராகவா லாரன்ஸ் உடன் ஓவியா, வேதிகா, நிக்கி தம்போலி, சத்யராஜ், கோவை சரளா, கபீர் துஹன் சிங், நெடுமுடி வேணு, மனோபாலா போன்றோரும் நடித்திருந்தனர்.
இவ்வாறு இருக்க காஞ்சனா4 இல் ராகவாவுடன் நடிப்பதற்கு மிருணாள் தாகூர் உடன் ஒப்பந்தம் போடப்பட்டதாக கூறப்படுகின்றது.