தமிழ் சினிமாவின் தளர்ச்சிக்கு பா. ரஞ்சித், வெற்றிமாறன் ஆகியோர் தான் காரணம்!-பிரவீன் காந்தி பேட்டி…

இயக்குனர் பிரவீன் காந்தி, ” பா. ரஞ்சித், வெற்றிமாறன் ஆகியோரின் வளர்ச்சிதன் தமிழ் சினிமாவின் தளர்ச்சிக்கு காரணம்” என்று குற்றம் சாட்டியது, பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

நடிகர் ரஞ்சித் நடித்த ’கவுண்டம்பாளையம்’ என்ற திரைப்படத்தின் புரமோஷன் விழாவிலே இவர் இவ்வாறு பேசியுள்ளார்.

இயக்குனர் வெற்றி மாறன் மற்றும் பா . ரஞ்சித் ஆகியோர் இயக்கும் படங்கள் எல்லாம் ஒடுக்கபட்ட கீழ் ஜாதி மக்களுக்கு சார்பாகவே இருக்கும்.

வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படம் உதாரணமாகும். இப் படத்தின் காட்சிகள் அனைத்தும் நன்றாகவே அமைந்திருக்கும். அதில் சூரி கதாநாயகனாக நடித்திருப்பார்.

அனைத்து ரசிகர்களும் இப் படம் தேசிய விருதை பெற்றிருக்கவேண்டிய படம் இதில் சூரிக்கு பதிலாக தனுஷ் அல்லது முன்னணனி நடிகர்கள் யாரும் நடித்திருந்தால் நிச்சயம் இதற்கு தேசிய விருது கிடைத்திருக்கும் என்று கூறுகின்றனர்.

இவ்வாறு தான் பா. ரஞ்சித் அவர்களும் ஆரம்பத்தில் வெங்கட் பிரபு அவர்களிடம் உதவி இயக்குநராக இருந்து பின் அட்டகத்தி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இவர் இயக்கும் படங்கள் எல்லாம் தாழ்த்தபட்டவர்களை மையப்படுத்தியே அமைந்திருக்கும்.

இவர்கள் இவ்வாறு செய்வதை பிரவீன் காந்தி சுட்டிக்காட்டி அவர்களுக்கு எதிராக விமர்சனங்களை ஏவி வருகின்றார்.

புரமோஷன் விழாவில் அவர், ஜாதியை வைத்து படம் எடுப்பவர்களுக்கு எதிராகதான் நான் எப்போதும் பேசுவேன். சினிமாவில் ஜாதியை சொல்பவர் சமுதாயத்தில் இருந்து ஒதுக்கப்பட வேண்டியவன் என்பது தான் என்னுடைய கொள்கை. என்றும்,

ஹேப்பி ஸ்ட்ரீட் என்ற நிகழ்ச்சி நடந்தபோது அதற்கு எதிராக முதலில் குரல் கொடுத்தவர் தான் நடிகர் ரஞ்சித்.நடிகர் ரஞ்சித்துக்கு ’எனது சகோதரர் எதிர்காலத்தில் கெட்டுப் போய்ப் கூடாது என்ற எண்ணம் இருக்கிறது.

என்னுடைய கலாச்சாரத்தை தூக்கிப் பிடிக்க நான் குரல் கொடுப்பேன் என்ற ரஞ்சித் நிச்சயமாக ஒரு நல்ல படம் எடுத்து இருப்பார் என்று நம்பி தான் நான் இந்த படத்தின் நிகழ்ச்சிக்கு வந்துள்ளேன் என்றும் கூறினார்.

more news