அன்றாட வாழ்வில் கணிதம் கட்டுரை

andrada valvil kanitham katturai in tamil

“எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்” இன்ற வாசகத்தின் படி எண் என்பது கணிதத்தை சுட்டுவதை காணலாம்.

எமது அன்றாட வாழ்வில் கணிதமும் அவசியமான ஒன்று என்பதையே இக்கருத்து உணர்த்துகின்றது. கணிதம் என்பது எல்லா உலக மக்களுக்கும் ஒரு பொதுவான மொழியாக காணப்படுகின்றமையும் அதன் மகிமையை எடுத்துக்காட்டுகின்றது.

அன்றாட வாழ்வில் கணிதம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • கணிதத்தின் தோற்றம்
  • கணிதத்தின் அவசியம்
  • கணிதத்தின் உபயோகம்
  • கணிதமும் மனிதனும்
  • முடிவுரை

முன்னுரை

உலகில் காணப்படக்கூடிய அனைத்து துறைகளிடமும் ஏதோ ஒரு வகையில் தொடர்பு கொண்ட ஒரு துறையாக கணிதம் காணப்படுகின்றது. இதனால்தான் ஒருவருக்கு கணிதத்தை புரிந்து கொள்வது கடினமானால் ஏனைய விஞ்ஞானங்களை புரிவதிலும் சிக்கல் ஏற்படுகின்றது.

மனிதனுடைய வாழ்வியல் வளர்ச்சியில் பங்காற்றக்கூடிய கணிதமானது அவனுடைய அன்றாட வாழ்வில் பிண்ணிப்பிணைந்ததாகவே உள்ளது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

கணிதத்தின் தோற்றம்

கணிதம் எப்போது தோன்றியது என்பதற்கு சரியான ஆதாரங்கள் எதுவும் இல்லாவிடினும், கற்கால வேடர் யுகம் வாழ்ந்த காலத்திலிருந்து கணிதத்தின் நடைமுறை இருப்பதாக நம்பப்படுகின்றது.

இதனாலேயே உலகில் காணப்படுகின்ற அனைத்து மொழிகளும் வரி வடிவம் பெறுவதற்கு முன்னர் கணிதம் வரி வடிவம் பெற்றுவிட்டது.

இதன் அடுத்த கட்டமாக கூட்டல் குறி இத்தாலியர்களாலும், பெருக்கல் குறி லிப்னிஸ் என்ற ஜெர்மனியராலும், தசம முறை எண் கணிதம் இந்தியர்களாளும் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு கணிதம் படிப்படியாக வளர்ச்சி கண்டது.

கணிதத்தின் அவசியம்

இன்று நாம் வாழும் உலகில், சாதாரண மக்கள் கூட தங்களுடைய அன்றாட வாழ்வியலைக் கழிப்பதற்கு கணிதத்தின் தேவை அதிகமாகவே காணப்படுகின்றது.

அதாவது நேரம், காலம் என்பவற்றை கணித்தல், வீட்டு வருமானம், செலவு, கொடுக்கல் வாங்கல், வருமானம், வியாபாரம் மற்றும் இலாப நஷ்டம் போன்ற அனைத்து விடையங்களையும் அன்றாடம் நாம் செய்கின்றோம்.

இவற்றை எல்லாம் துல்லியமாக மேற்கொள்ள கணிதம் மிகவும் அவசியமான ஒன்றாகவே காணப்படுகின்றது. ஆகவே மனிதனின் அன்றாட வாழ்க்கைக்கு கணிதம் அவசியமானது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மையாகும்.

கணிதத்தின் உபயோகம்

இன்றய தொழிநுட்ப யுகத்தில் அனைத்து துறைகளிலும் கணிதத்தின் உபயோகம் காணப்படவே செய்கிறது. அதாவது கல்வி துறையில் கணிதப் பாடத்துக்கு என தனியான ஒரு இடம் இருக்கிறது.

அன்றாட கொடுக்கல் வாங்கல் தொடக்கம் நாட்டின் பிரதமர், ஜனாதிபதி என்போரை தெரிவு செய்தல் வரை இந்த கணிதம் உபயோகப்படுவதனைக் காணலாம்.

மேலும் நாட்டின் பொருளாதாரத் துறை, அபிவிருத்தி துறை, விஞ்ஞான கண்டுபிடிப்புகள், தொழில்நுட்ப கட்டமைப்புகள் என அனைத்து விடையங்களிலும் கணிதத்தின் உபயோகம் இன்றியமையாதாகவே காணப்படுகின்றது.

கணிதமும் மனிதனும்

கணிதம் என்றாலே கடினமானது என பலர் கருதுகின்றனர். ஆனால் கணிதத்துறையினை மட்டுமே விரும்பும் மக்களும் உள்ளனர். கணிதம் என்றால் கசப்பானது என்ற மனநிலை தவறானதாகும். நாம் ஒரு செயலை விரும்பிச் செய்தால் அது எம் கைவந்த கலையாகவே மாறிவிடும்.

கணிதத்தினையும் நாம் விரும்பி படித்தால் அதனை இலகுவாகப் புரிந்து கொள்ள முடியும். அன்றாட வாழ்வில் கணிதத்திற்கும் மனிதனுக்குமான தொடர்பு பின்னிப்பிணைந்துள்ளமையால் சிறுவயது முதலே கணிதத்தை கற்பதும், கற்பிப்பதும் நம் கடமையாகும்.

முடிவுரை

உலகின் பல்வேறு கண்டுபிடிப்புகளின் அடிப்படை கணிதம் என்றால் அது மிகையாகாது. அன்றாட வாழ்க்கையிலும் சரி கல்வித் துறையிலும் சரி கணித நுட்ப முறைகள் அவசியமானதாகவே காணப்படுகின்றன.

வாழ்வின் ஒவ்வொரு நகர்விலும் எம்மோடு கணிதமும் பயணிக்கிறது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

You May Also Like:

கணக்கும் இனிக்கும் கட்டுரை

செயற்கை நுண்ணறிவு கட்டுரை