ரசிகரின் மரணத்திற்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்த ஜெயம் ரவி!

2003 இல் ஜெயம் படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர்.

சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் 1,2 இல் பொன்னியின் செல்வனாக நடித்திருந்தார்.

பொன்னியின் செல்வன் படம் மிக பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.

தமிழ் சினிமாவில் இத்தனை நடிகர்கள் இருந்தும் பொன்னியின் செல்வனாக நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது இவருடைய திறமையை வெளிக்கக்காட்டுகின்றது.

சென்னை எம் ஜி ஆர் நகரில் ஜெயம் ரவியின் ரசிகர் மன்றம் உள்ளது. ஜெயம் ரவியின் ரசிகர் மன்றத்தின் தலைவர் ராஜா.

சென்னை கே. கே நகரில் வசித்து வரும் ராஜா 33 வயதுகள் கடந்த நிலையில் உடல் நல குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த ராஜா ரசிகர் மன்றத்தின் சார்பாக பல உதவிகளையும் சமூக சேவைகளையும் செய்து வந்துள்ளார்.

இவர் உயிரிழந்ததை அறிந்த ஜெயம் ரவி அவருடைய வீட்டுக்கு சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும் அவருடைய குடும்பத்திற்கு எந்த உதவியானாலும் தான் செய்து தருவதாகவும் கூறியுள்ளார்.

More News