விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் 2010 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். 2004 ஆம் ஆண்டு சினிமாவிற்கு அறிமுகமாகி சின்ன சின்ன பத்திரங்களை ஏற்று நடித்தார். இன்று ஒரு கிரோவாக வளர்ந்து விட்டார்.
சுந்தர பாண்டியன் படத்தில் வில்லனாக நடித்து சிறந்த வில்லனுக்கான தமிழக அரசு விருதை பெற்றார். இவர் நடித்த பிட்சா, விக்ரம் வேதா, 96 போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.
விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைபடத்திலும் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்திலும் வில்லனாக நடித்திருப்பார்.
விடுதலை படத்திலும் ஒரு சிறந்த பாத்திரத்தை ஏற்று நடித்திருப்பார். விடுதலை படத்தின் வெற்றிக்கு இவரின் நடிப்பும் ஒரு காரணமாகும்.
இவ்வாறு இருக்க தற்போது மகாராஜா படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ரிலீஸ் திகதியை படக்குழு வெளியிட்டுள்ளது.
மகாராஜா படத்தை குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன் இயக்கியுள்ளார். குரங்கு பொம்மை படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்ததால் மாகாராஜா படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
இப் படத்திற்கு அஜனீஷ் பி. லோகநாதன் இசையமைததுள்ளார். இந்த படம் விஜய் சேதுபதியின் 50 வது திரைபடமாகும். வரும் 14 ம் திகதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.