அட்டகத்தி படத்தின் மூலம் திரை உலகிற்கு இயக்குநராக அறிமுகமானவர் பா. ரஞ்சித். அட்டகத்தி படத்தைத் தொடர்ந்து அவர் இயக்கிய மெட்ராஸ் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
இதனை தொடர்ந்து கபாலி படத்தை இயக்கினார்.அதுவும் மிக்கபேரிய வெற்றியை தழுவிய நிலையில் மீண்டும் ராஜனியை வைத்து காலா படத்தை இயக்கினார். இது வியாபார ரீதியில் தோல்வியை அடைந்த பின்னர் அவருடன் ரஜனி படம் நடிக்க மறுத்து விட்டார்.
ரஜினிகாந்தை வைத்து தலித் அரசியல் சினிமா எப்படி பண்ணிங்க கபாலி மற்றும் காலா படத்தின் குறியீடு மற்றும் உள் கருத்து ரஜினிகாந்துக்கு புரிந்து தான் நடித்தாரா? என்பது போல பா.ரஞ்சித்திடம் அருகே இருந்தவர் பேச அதற்கு பதிலளிக்காமல் நக்கல் சிரிப்பை சிரித்து பா.ரஞ்சித் ரஜினிகாந்தை அசிங்கப்படுத்தி விட்டார் என நன்றி கெட்ட ரஞ்சித் என்று ரஜினிகாந்த் ரசிகர்கள் ரஞ்சித்தை கடந்த 2 நாட்களாக சமூக வலை தளங்களில் திட்டி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற தம்மா தியேட்டர் விழாவில் கலந்துக் கொண்டு பேசிய பா.ரஞ்சித் “சும்மா சிரிச்சதுக்கே இப்படி ஆகிடுச்சு, நம்ம சிரிப்புக்கு பவர் இருக்கு. அதை சரியா பயன்படுத்தனும்” என பேசியிருந்தார். இது மீண்டும் ரசிகர்களை கடும் கோபத்தில் ஆழ்த்தி விட்டார்.