மீண்டும் இணையும் நிவின் நயன்தாரா!

nayanthara

லேடி சூப்பர் ஸ்ட்ரார் என்று அழைக்கப்படும் நயன்தாரா தமிழ், மலையாளம், தெலுங்கு, கிந்தி என அனைத்து மொழிகளிலும் கதாநாயகியாக கலக்கி வருகின்றார்.

தமிழ் சினிமாவிலே அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்றால் அது நயன் தான். 2019ஆம் ஆண்டு தியான் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் வெளியான ‘லவ் ஆக்ஷன் டிராமா’ படத்தில் நிவின் பாலி மற்றும் நயன்தாரா இணைந்து நடித்தனர். இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், தற்பொழுது நயன்தாரா மீண்டும் நிவின் பாலியுடன் இணைந்து “டியர் ஸ்டூடண்ட்ஸ்” நடிக்கவிருக்கிறார். அறிமுக இயக்குனரான சந்தீப் குமார் மற்றும் ஜார்ஜ் பிலிப் இப்படத்தை இயக்கவுள்ளார்.

இப்படத்தை பாலி ஜூனியர் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கவுள்ளதாக நிவின் தனது எக்ஸ் தளத்தில்காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பேப்பர் இல் மை ஊற்றி நயந்தாராவின் புகைப்படமும் உள்ளது.

More News