சூப்பர் ஸ்டார் ரஜனி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்கின்றார். வில்லனாக நடித்து கதாநாயகனாக உருவெடுத்த ரஜனி இன்று ஓட்டு மொத்த தமிழ் சினிமாவையே ஆட்டி படைத்து வருகின்றார்.
சமீபத்தில் இவர் நடித்த படங்கள் எதுவும் பெரிய வரவேற்பை பெறவில்லை. தோல்வியில் முடிந்தன. அதனால் இவருக்கு வயதாகி விட்டது. எனிமேல் இவரால் நடிப்பை தொடரமுடியாது என செய்திகள் சலசலக்க தொடங்கி விட்டது.
இவை அனைத்திற்கும் பதிலளிக்கும் விதமாக ஜெயிலர் படத்தில் மாபெரும் வெற்றியை கொடுத்தார். ஜெயிலர் படத்தை பார்த்த அனைவரும் வாயடைத்து போனார்கள்.
தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகின்றார். இப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கபடுகின்றது.
இவ்வாறு இருக்க தற்போது லொகேஷ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்கவுள்ளார். இது தொடர்பான டீஸர் வெளியானது.
இதிலும் பெரும் சர்ச்சையை கிளப்பிவிட்டார் இளையராஜா. தன்னுடைய அனுமதி இன்றி தனது இசை பயன்படுத்தபட்டது என்று சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக ரஜனியிடம் கேட்ட போது அது அவருக்கும் இயக்குனருக்கும் உள்ள பிரச்சனை என்று கூறி அதிலிருந்து விலகி விட்டார்.
இவ்வாறு இருக்க சமீபத்தில் நடிகர் லாரன்ஸ் நடிப்பில் வெளியாகும் படங்களும் பெரிய வரவேற்பை பரவில்லை.
சந்திரமுகி 2 வில் லாரன்ஸ் நடித்திருப்பார். இப் படம் சந்திரமுகியோடு நிறுத்தியிருக்கலாம் என்று ரசிகர்கள் கலாய்த்து வந்தனர். இவ்வாறு இருக்க ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் இவருக்கு பெரும் வெற்றியை கொடுத்தது.
என்னதான் சினிமாவில் நடித்தாலும் மக்களுக்கு நற்பணிகள் செய்வதை இவர் மறப்பதில்லை. தற்போது இவர் மாற்றம் என்ற பெயரில் ஒரு அறக்கட்டளை நிறுவி அதன் மூலம் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யும் வகையில் தனது அடுத்த முயற்சியினை தொடங்கி இருக்கிறார்.
லாரன்ஸ் அவர்களின் செயலை பாராட்டி நடிகர் ரஜினி அவருடைய வாழ்த்தை தெரிவிக்கும் வகையில் ஆடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
அந்த ஆடியோவில் ரஜினி ஆரம்பத்திலிருந்து ஏழை மக்களுக்கு உதவும் லாரன்ஸ் மாஸ்டர் அவர்களே இந்த மாற்றம் அறக்கட்டளையின் மூலம் இன்னும் நிறைய ஏழை எளிய மக்களுக்கு உதவும் உங்கள் எண்ணத்தை நினைத்து நான் பாராட்டுகிறேன்.
அதற்கு அந்த ஆண்டவனும் ரசிகர்களும் உங்களுக்கு துணையாக இருப்பார்கள் என்று இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன் என கூறி இருக்கிறார்.