ஜி. வி பிரகாஷ்-சைந்தவி விவாகரத்தில் விஜய் தலையிட்டாரா?- அந்தணனின் பேட்டி!

ஜி. வி பிரகாஷ்,சைந்தவி இருவருமே காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் பள்ளி பருவ காதலர்கள். 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு ஏழு வருடங்கள் கழித்து ஒரு பெண்குழந்தை பிறந்தது. தற்போது அக் குழந்தைக்கு நான்கு வயதுகள் ஆகின்றது.

இவ்வாறு இருக்க இவர்கள் இருவரும் தமது பிரிவை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

ஜிவி பிரகாஷ், நானும், சைந்தவியும் 11 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு பிரிய முடிவு செய்திருக்கிறோம். ஒருவர் மீது ஒருவர் நாங்கள் வைத்திருக்கும் பரஸ்பர மரியாதை அப்படியே நீடிக்கும்.

இது எங்கள் இருவருக்கும் சிறந்த முடிவாக இருக்கும் என்று நம்புகிறோம். இந்த கடினமான காலகட்டத்தில் உங்களுடைய புரிதலும், ஆதரவும் எங்களுக்கு மிகவும் முக்கியம். நன்றி என சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து உள்ளார்.

அதனிடையே ஜி வி மீண்டும் தனது வலைத்தளத்தில் நாம் இருவரும் ஏற்கனவே காயபட்டுள்ளவமிமீண்டும் நீங்கள் எம்மை காயபடுத்தவேண்டாம் என்று கூறினார்.

இவ்வாறு இருக்க இவர்களின் பிரிவை பற்றி அந்தணன் கூறியுள்ளார். ஏஆர் ரஹ்மான், தாய்மாமன் என்பது பலமான உறவாக இருந்தாலும், இருவருக்கும் இடையே பெரியளவில் உறவு இல்லை . ஏ ஆர் ரகுமாநின் உதவி இல்லாமல் தான் ஜிவி பிரகாஷ் தன் கேரியரை தொடங்கினார். அதன்பின் தான் ரகுமானிடம் அவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இப்படி இருக்கும் போது ஏ.ஆர். ரஹ்மான் தலையிட்டார், விஜய் தலையிட்டார் என்று சொல்வதை எல்லாம் ஏற்றுக்கொள்ளவே முடியாது.மற்றும் இவங்க விவாகரத்து விஷயத்தில் தனுஷை இழுத்து வைத்து இணையத்தில் செய்தி பரவுவதை பார்க்க முடிகிறது.

யார் குடும்பம் பிரிந்தாலும், இவர் தான் காரணம் என்று சொல்வது எல்லாம், ரொம்ப அபத்தமாக இருக்கு, சைந்தவி – ஜி வி பிரகாஷ் விவாகரத்து முடிவில், அவர் அம்மா கூட தலையிடவில்லை என்பது தான் உண்மை.

ஏனென்றால், என்ன தான் நட்பாக நெருங்கி பழகி இருந்தாலும் குடும்ப விஷயத்தில் தலையிடமாட்டார்கள், அது தான் உண்மை என்று அந்தணன் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

ஒரு பிரபலம் வீட்டில் ஏதாவது ஒரு பிரச்சினை நடந்தாலும் அதை ஊதி பெரிதாக்கி விடுவார்கள். அதுமட்டுமல்லாது என்னோருவருடன் அவர்களை கோர்த்தும் விடுவார்கள். இது சினிமாவில் வழமையாக நடக்கின்ற விடயம் தான். இதனால் தான் எந்த பிரபலமும் இதையெல்லாம் கருத்தில் கொள்வதில்லை.

more news