மூக்குத்தி அம்மன் படத்தில் நயன்தாரா, ஆர்,ஜே பாலாஜி, ஊர்வசி போன்றோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இதில் அம்மன் வேடத்தில் நயன்தாரா நடித்திருந்தது ரசிகர்களுக்கு மிகவும் புதிதாக இருந்தது.
ஒரு படத்திற்கு கீரோ எந்தளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு வில்லனும் முக்கியமே. ஒரு மனிதனை கீரோவாக காண்பிப்பது வில்லன் கதாபாத்திரம் மட்டுமே.
ஆனால் இப் படத்தில் வில்லனை காமெடியன் போல காட்டியுள்ளனர் என்று இப் படத்திற்கு எதிர்மறையான கருத்துக்களே வெளியானது. ஒரு சிலர் நாயன்தாராவிற்கு இந்த பாத்திரம் பொருந்தவில்லை என்றும் கூறினர்.
இவ்வாறு இருக்க பாலாஜி அளித்த பேட்டி ஒன்றில் மூக்குத்தி அம்மன் காதபாத்திரத்தில் நடிக்க முதலில் அனுஷ்காவிடம் கேட்டேன். அவரும் கதை கேட்டு ஓகே சொல்லி விட்டார். ஆனால் எட்டு மாதம் வெஜிட் பண்ண சொன்னார்.
ஏற்கனவே படம் வெளியாகும் திகதி முடிவு பண்ணி விட்டதால் நயன்தாரா விடம் கதையை சொல்ல அவரும் ஓகே சொல்லி விட்டாராம். அதனால் அவரை வைத்து எடுத்து முடித்து விட்டதாக கூறினர்.
இப்படத்தில் அனுஷ்கா நடித்திருந்தால் அவருக்கு மீண்டும் பல வாய்ப்புகள் கிடைத்திருக்கும். இவர் தானே படவாய்ப்புகளை இழந்துள்ளார்.