கனடா விசா எவ்வளவு நாளில் கிடைக்கும்

Temporary residence to Canada (visit or study) – Last update: February 20, 2024 Updated weekly

Sri Lanka86 Days
India28 Days

கனடாவிற்கான விசா முடிவு வருவதற்கான கால அளவு என்பது நாடுகளுக்கு நாடு வேறுபடும். மேலும் இந்த கால அளவு ஒவ்வொரு கிழமையும் மாறுகின்றது.

இந்த கால அளவு என்பது கடந்த காலங்களில் 80% ஆன விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதற்கு எவ்வளவு காலம் எடுத்துள்ளது என்பதை வைத்து கால அளவு தீர்மானிக்கப்படுகின்றது.

இன்றைய நாளில் இலங்கையில் இருந்து கனடா விசாவிற்கு விண்ணப்பிவருக்கான விசா காலம் 86 நாட்கள். அதாவது 86 நாட்களினுள் விசா முடிவு பெரும்பாலும் வந்து விடும். ஆனால் 20% விண்ணப்பங்கள் இந்த 86 நாட்களையும் தாண்டி அதிக நாட்கள் எடுக்கும்.

உங்களுடைய விண்ணப்பங்களுக்குரிய முடிவுகள் 86 நாட்களையும் கடந்து அதிக நாட்கள் சென்றால் 20% backlog விண்ணப்பங்களில் உள்ளது விரைவில் முடிவு வரும் என கொள்ளலாம்.

அதிக நாட்கள் கடந்து செல்வதால் விசா நிராகரிக்கப்படும் அல்லது விசா வெற்றியடையும் என்ற எந்த முடிவிற்கும் நாம் வர முடியாது அது எமது விண்ணப்பங்களை பார்வையிடும் அதிகாரியின் கையில் தான் உள்ளது.

பொதுவாக பெரும்பாலான விண்ணப்பங்களின் முடிவுகள் இந்த 86 நாட்களிற்குள் வந்து விடும். அதிலும் அதிகம் குறுகிய காலத்திற்குள் முடிவுகள் வருகின்றன.