வசூல் வேட்டையாடும் ஸ்டார்!- சம்பளத்தை அதிகரித்த கவின்..

கவின் நடிப்பில் இளனின் இயக்கத்தில் மே 10 ம் திகதி வெளியான படம் ஸ்டார். விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

சிறுவயதில் இருந்தே ஒரு நடிகனாக வேண்டும் என்ற ஆசையுடன் வாழும் கீரோ, இதற்கு ஆதரவு தெரிவிக்கும் தந்தை, இறுதியில் நடிகன் ஆகுகின்றாரா? இல்லையா? அதற்கு அவர் எடுக்கும் முயற்சிகள், அவர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்றவாறு படத்தின் கதை அமைகின்றது.

இவர் இதற்கு முன்பு நடித்த படங்களில் 40 லட்சம் சம்பளமாக வாங்கி வந்தார். ஆனால் இந்த படத்திற்கு 2 கோடி சம்பளம் கேட்டுள்ளார்.

இது பற்றி இவரிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது  ஒவ்வொரு நடிகரின் மார்க்கெட் உயரும் பொழுது அவர்களுடைய சம்பளத்தை உயர்த்துவதில் எந்தவித தவறும் இல்லையே என்று கவின் கூறியுள்ளார்.

கவினி சம்பள உயர்வு பற்றி கே ராஜன் ரொம்பவே கோபமாக பதில் அளித்திருக்கிறார். எந்த ஒரு படமும் கவின் நடித்ததற்காக ஓடவில்லை.

அந்தப் படத்தின் கதையை வெற்றிகரமாக கொடுத்த இயக்குனர் மற்றும் எவ்வளவு செலவு பண்ணினாலும் பரவாயில்லை என்று தயாரிப்பாளர்களும் துணிந்து எடுத்த ஒரு விஷயம் தான் அவருக்கு வெற்றியை கொடுத்திருக்கின்றது.

நடித்த இரண்டு படங்கள் ஹிட்டானதும் அதிகமான சம்பளத்தை கேட்பது ரொம்பவே மட்டமானது என்று தயாரிப்பாளர் கே ராஜன் பேசி இருக்கிறார்.

இப் படம் தமிழ் நாட்டில் மட்டும் மூன்று நாட்களில் 10 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. உலகம் முழுவதும் 15 கோடி வசூல் செய்துள்ளது.

ஸ்டார் பட டீரெயிலருக்கு ரசிகர்கள் வழங்கிய ஆதரவுதான் கவினின் சம்பள உயர்வுக்கு காரணம் என்று அனைவரும் கூறி வருகின்றனர்.

more news