ஆஷூரா என்றால் என்ன

ashura in tamil

இஸ்லாமியர்களின் சிறப்புமிக்க நாட்களுள் ஒன்றாகவே இந்நாள் திகழ்கின்றது.

ஆஷூரா என்றால் என்ன

ஆஷூரா என்பது முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளை குறித்து நிற்கின்றது. இந்நாள் இஸ்லாமியர்களின் மிக முக்கிய நாளாகும். ஆஸரா தினத்தில் நோன்பு வைப்பது சிறந்ததாக காணப்படுகின்றது.

ஆஷூரா நாளின் அற்புதங்களும் வரலாற்று சம்பவங்களும்

முஹர்ரம் மாதம் பத்தாம் நாளில் நபி ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டு சுவர்க்கத்தில் இருந்தார்கள். அதாவது இப்லீஸின் சூழ்ச்சியால் அவர்களுக்கு ஏற்பட்ட சறுகுதலின் காரணமாக அல்லாஹ் அவர்களையும் அவர்களது துணைவியான ஹவ்வா அம்மையார் அவர்களையும் பூமிக்கு அனுப்பினான்.

இதன் காரணமாக நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இந்த தவறுக்காக அல்லாஹ்விடம் பல காலம் தௌபா செய்தார்கள். அவர்களின் தௌபா ஏற்றுக் கொள்ளப்பட்ட தினமே இந்த ஆஷூரா தினமாகும் என்பதினூடாக பாவமன்னிப்பிற்கான சிறந்த நாளாக ஆஷூரா நாளானது காணப்படுகிறது.

நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மக்களுக்கு ஏகத்துவ இறை செய்தியையும் கொள்கையையும் எடுத்து கூறிய போது அதனை மக்களில் பலர் ஏற்க மறுத்தார்கள். சொற்பமான நபர்கள் மட்டுமே அவர்களை கொண்டு ஈமான் கொண்டார்கள்.

இறைவனிடம் பிராத்தனை செய்தார்கள். பூமியில் காபிர்களை விட்டு வைக்க வேண்டாம் அவர்கள் வரம்பு மீறி வழிகேட்டிலும் வழிகெடுப்பதிலும் விரைவார்கள் என்று முறையிட்டார்கள்.

அல்லாஹ் நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களை ஒரு கப்பலை செய்ய சொல்லி அதில் இஸ்லாத்தை ஏற்ற மக்களையும் ஏற கட்டளையிடுகின்றான். அனைத்து உயிர்களும் கப்பலில் ஏறிக் கொண்டார்கள்.

அல்லாஹ்வின் உத்தரவின் படி மழை பொழிந்தது பின்பு கடுமையான மழை வெள்ளம் பெருக்கெடுத்தது. கப்பலில் உள்ள முஸ்லிம்களை தவிர அனைத்து மக்களும் வெள்ளத்தில் மூழ்கினார்கள்.

ஆறு மாதங்களின் பின்னர் ஜூத் என்று சொல்லப்படும் ஒரு மலையின் மீது அந்த கப்பல் கரையிறங்கியது. இக்கப்பல் கரையிறங்கிய நாளும் இந்த ஆஷூரா நாளேயாகும்.

பிர்அவ்ன் மற்றும் சூனியக்காரர்களுக்கு எதிராக அல்லாஹ் வெற்றியை தந்த தினம் ஆஸரா தினமாகும் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

பிர்அவ்னின் மொத்த படை அழிக்கப்பட்ட நாளும் ஆஷூரா நாளேயாகும் என்பதினூடாக பல அற்புதங்களையும் வரலாற்று சம்பவங்களையும் கொண்டமைந்த நாளாக ஆஷூரா நாளானது காணப்படுகிறது.

ஆஷூரா நாளின் சிறப்புக்கள்

ஆஷூரா தினத்தில் பாவமன்னிப்பு தேடுவது சிறந்ததாக காணப்படுவதோடு இதற்கு முன் சென்ற வருடத்தில் செய்த பாவங்களும் மன்னிக்கப்படுகின்றது.

ஆஷூரா தினத்தில் நோன்பு நோற்பது சிறந்ததாக காணப்படுவதோடு நன்மைகளையும் ஈட்டித் தருவதாக இந்த ஆஷூரா நோன்பானது காணப்படுகிறது.

நபி யூனுஸ் (அலை) அவர்களின் கூட்டம் வேதனையை விட்டு பாதுகாக்கப்பட்தொரு நாளாகவும் கொடுங்கோல் ஆட்சியினை உடைய பிர்அவ்ன் அழிக்கப்பட்ட நாளாகவும் இந்த ஆஷூரா நாளே காணப்படுகிறது.

இந்நாளில் எமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு நரக நெருப்பில் இருந்து பாதுகாப்பு பெறவும் முடியும்.

ஆஷூரா நோன்பின் முக்கியத்துவம் ஆஷூரா தினத்தில் நோன்பு வைப்பது என்பது சிறப்புமிக்கதொன்றாகவே காணப்படுகிறது. அந்த வகையில் ஆஷூரா நோன்பின் மகத்துவத்தினை பின்வருமாறு நோக்கலாம்.

ஆஷூரா நோன்பானது பாவங்களுக்கு பரிகாரமாகும். அதாவது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்பதை அதற்கு முந்தைய ஓராண்டின் பாவத்திற்கு பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என நான் எதிர்பார்க்கிறேன் என்று ஹதீஸானது இடம் பெற்றுள்ளது.

ஆஷூரா எனும் இந்த நாளையும் (ரமலான்) எனும் இந்த மாதத்தையும் தவிர வேறெதையும் ஏனையவற்றை விட சிறப்பித்து தேர்ந்தெடுத்து நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றதை நான் பார்க்கவில்லை என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். இவற்றினூடாக ஆஷூரா நாளின் சிறப்பானது எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

You May Also Like:

சிந்துக்குத் தந்தை என அழைக்கப்பட்டவர்

அறவுரைக்கோவை என அழைக்கப்படும் நூல்