நான் விஜய் டிவியில் இருந்து வெளியேற இவர்கள் தான் காரணம்!-முதல்முறையாக உண்மையை உடைத்தெறிந்த செப் வெங்கட் பட்

ரியாலிட்டி ஷோ என்றாலே அது விஜய் டிவி ஷோ தான். ஒரு சமையல் போட்டியை இவ்வளவு நகைச்சுவை நிகழ்ச்சியாகவும் கொண்டுவரலாம் என்று காட்டியது விஜய் டிவியே.

நான்கு வருடங்களாக இரு நடுவர்கள், ஒரு ஆங்கர் போட்டியாளர்கள், அவர்களுக்கு உதவியாக கோமாளிகள் என சிறப்பாக நடை பெற்று வந்தது.

தற்போது விஜய் டிவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தயாரிப்பு குழு விஜய் டிவியை விட்டு விலகிவிட்டது. விஜய் டிவி இவர்களை குக் வித் கோமாளி ஷோவை மட்டும் பார்த்து கொள்ளுமாறும் ஏனைய நிகழ்ச்சிகளை நாம் தயாரிக்கின்றோம் என்றும் கூற அதற்கு தாம் அனைத்தில் இருந்தும் விலகுகின்றோம் என்று கூறி அத் தயாரிப்பு குழு விலகியதாக தகவல்கள் கசிந்தது.

இதனால் குக் வித் கோமாளி சீசன் 5 வெளியாக சற்று தாமதம் ஆகி விட்டது. இதனால் இது 4 சீஷனோடு முடிவடைந்து விட்டது என்று பொய்யான தகவல்கள் எல்லாம் இணையத்தில் பரவின.

இவ்வாறு இருக்க தற்போது ஆரம்பமாகிவிட்டது. அதில் நடுவர் உட்பட பலரும் மாறியுள்ளனர். செப் வெங்கட் பட்டும் இதில்இருந்து விலகி விட்டார். இவருக்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜன் வந்துள்ளார்.

இதில்இருந்து பல கோமாளிகளும் சன்டிவிக்கு தாவி விட்டனர். விஜய் டிவியில் இருந்து தயாரிப்பு குழு, வெங்கட் பாட் உட்பட சில கோமாளிகளும் சென்று விட்டனர். தற்போது இவர்களை வைத்து டாப்பு குக்கூ டூப்பு குக்கூ என்ற நிகழ்ச்சியை சன்டிவி ஆரம்பிக்கவுள்ளது.

இவ்வாறு இருக்க செப் வெங்கட் பாட் தான் விலகியதற்கான காரணத்தை கூறியுள்ளார். நான் விஜய் டிவியில் இத்தனை வருடமாக சுதந்திரமா வேலை செய்வதற்கு காரணமாக இருந்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தயாரித்த மீடியா மெஷன்ஸ் நிறுவனம் தான். எனக்கு இவர்கள் தான் கம்போர்ட், அதனால் நானும் இவர்களோடு வெளியே வர வேண்டிய சூழ்நிலை என கூறியுள்ளார்.

எவ்வாறு இருப்பினும் செப் வெங்கட் பட்டின் இடத்தை விஜய் டிவியினால் நிரப்ப முடியவில்லை என்று தான் கூறவேண்டும்.

more news