கெர்போட்ட நிவர்த்தி என்றால் என்ன

kerpotta nivarthi in tamil

நம் முன்னோர்களான சித்தர்களும், மகான்களும் அறிவியல் அறிவாலும், அறியப்படாத பல உண்மைகளை அவர்களது தவ வலிமைகளாலும் கண்டறிந்து மெய்ஞானமாக நமக்கு வழங்கிய பொக்கிஷங்கள் எண்ணிலடங்காதவை ஆகும்.

அது நுட்பமான மனித உடற் கூறுகள் முதற் கொண்டு மனித மனம் உருவாகும் மாயை வலையிலும் மிகச்சிறிய அணுவில் இருந்து அதனிலும் சிறிய கடவுள் துகள்கள் வரையிலும் வான் காந்தம், ஜீவகாந்தம், ஜோதிடம், மருத்துவம் என விஞ்ஞானத்தால் சிறிதும் கூட எட்டிப் பிடிக்க முடியாத பலமே மெஞ்ஞானங்களை நமக்கு வழங்கியுள்ளனர்.

அதில் ஒன்றுதான் கோள்களை வைத்து எழுதப்படும் பஞ்சாங்கம் என்ற மாபெரும் பொக்கிஷம் ஆகும்.

பஞ்சாங்கத்தை அடிப்படையாகக் கொண்டே தினசரி நாட்காட்டிகள் அச்சிடப்படுகின்றன. இந்த நாட்காட்டிகளிலேயே கெர்போட்ட ஆரம்பம் என்றும், 14 நாட்களுக்குப் பின் உள்ள திகதியிலே ஏற்பட்ட நிவர்த்தி எனவும் குறிப்பிடப்பட்டிருக்கும்.

இது ஒரு பண்டிகையோ அல்லது திருவிழாவோ அல்ல. வானில் நடக்கக்கூடிய ஒரு நிகழ்வைப் பற்றிய குறிப்பாகும். அதாவது தமிழர்களின் அடுத்த வருட மழைக் கணிப்பு முறையாகும்.

கெர்போட்ட ஆரம்பம் மற்றும் கெர்போட்ட நிவர்த்தி

நமது முன்னோர்கள் பால் வெளியில் உள்ள சூரிய குடும்பத்தில் நட்சத்திரங்களை 27 ஆகவும் ராசிகளை 12 ஆகவும் பிரித்து தந்துள்ளனர். அதில் சூரிய பகவான் மார்கழி என்ற தனூர் மாதத்தில் தனூர் ராசியில் பிரவேசித்து அதில் உள்ள பூராட நட்சத்திரத்தை கடக்க 14 நாட்களை எடுத்துக் கொள்கின்றார்.

இந்த வேளையிலேயே மேகமானது தெற்கு நோக்கி நகர்ந்து கருக் கொள்வதாக கூறப்படுகின்றது. இந்தப் 14 நாட்களும் கெர்போட்ட நாட்களாகும்.

அதாவது மழை கருக்கொள்ளும் நாள் அல்லது மேகம் சூலாகும் நாள் ஆகும். இவ்வாறு மேகம் கருக் கொள்ளத் தொடங்குவதையே கெர்போட்ட ஆரம்பம் என்றும், 14 நாட்களுக்குப் பின்னர் கரு கொள்வது நிறைவு பெறுவதை கெர்போட்ட நிவர்த்தியனவும் கூறுகின்றனர்.

மேகத்தின் கருவூட்டம் என்ற சொல்லே காலப்போக்கில் கர்போட்டம் என மருவி இன்று கெர்போட்டம் என கலண்டர்களில் குறிப்பிடப்படுகின்றது. மேகம் கருக் கொள்வதை பெண்ணின் கருக் கொள்ளும் காலத்துடன் ஒப்பிடுகின்றனர்.

அதாவது மார்கழியில் கர்ப்பம் தரிக்கும் பெண்ணானவள் 9 மாதம் கழித்து புரட்டாசிக்கு பின்னர் குழந்தையை பெற்றெடுப்பது போல மார்கழியில் கருவுற்ற மோகமானது ஒன்பது மாதங்களின் பின்னர் அடுத்த ஆண்டு ஐப்பசி, கார்த்திகையிலேயே மழையாகப் பொழியும் என்பதை குறிப்பதே கெர்போட்டம் ஆகும்.

இந்தக் கெர்போட்ட நாட்கள் தோராயமாக மார்கழி 28 முதல் தை 11 ஆம் திகதி வரை அமைகின்றது. கருவோட்ட ஆரம்பம் முதல் நிவர்த்தி வரை காலப்பகுதியிலே லேசாக தூரல் இருந்தால் மேகமானது சரியாக கருவிட்டிருக்கிறது என்றும் அதனால் அடுத்த ஆண்டு ஐப்பசி கார்த்திகையில் நல்ல மழை இருக்கும் என கணிக்கப்படும்.

இதற்கு மாறாக கருவூட்ட காலத்தில் கன மழை அல்லது, அதிக வெயில் இருந்தால் மேகம் சரியாகக் கருக்கொல்லவில்லை என்றும் அதனால் அடுத்த வருடம் பருவ மழை சரியாக இருக்காது என்றும் கணிக்கப்படுகின்றது.

விவசாயிகளுக்கு இந்த கெர்போட்டக் கணிப்பானது மிகவும் பயனுள்ளதாக அமைகின்றது. இதனை அடிப்படையாகக் கொண்டே மானாவாரிப் பயிர்கள் விதைக்கப்படுகின்றன.

You May Also Like:

சுடுமண் சிற்பங்கள் என்றால் என்ன

புயல் எச்சரிக்கை கூண்டு என்றால் என்ன