புயல் எச்சரிக்கை கூண்டு என்றால் என்ன

puyal echarikkai koondu in tamil

புயலின் போது பெரிதும் பாதிக்கப்படுவது கடலோரப் பகுதிகள் தான் குறிப்பாக துறைமுகங்கள் அதனை நோக்கி வரும் கப்பல்கள், படகுகள், கடலில் இருந்து கரையினை நோக்கி வருபவர்கள், மீனவர்களை எச்சரிக்கவும், பொது மக்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கவும் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படுகின்றது. இந்த பணியினை வானிலை ஆய்வு தரவுகளின் அடிப்படையில் துறைமுக நிர்வாகம் மேற்கொள்ளும்.

பகல் நேரங்களில் கறுப்பு நிறத்துடன் கூடிய மூங்கில் பிரம்புகளால் ஆன சின்னங்களும் இரவு மற்றும் மேகமூட்டமுள்ள நேரங்களில் ஒளிகளை பாய்ச்சும் விளக்குகள் மூலமாகவும் இந்த எச்சரிக்கைகள் விடுக்கப்படுகின்றன. சில நாடுகளில் புயல் அபாய எச்சரிக்கையினை வண்ணக் கொடிகள் மூலம் உணர்த்துகின்றமை குறிப்பிடத்தக்கதொன்றாகும்.

புயல் எச்சரிக்கை கூண்டுகளின் 11 நிலைகள் என்னென்ன

பொதுவாக புயல் காலங்களில் 1 முதல் 11 வரை புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்படும்.

முதலாம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால் புயல் உருவாகக் கூடிய வானிலை சூழல் உருவாகியுள்ளது என்று அர்த்தம் இதனால் துறைமுகம் எதுவும் பாதிக்கப்படாது ஆனால் சற்றே பலமாக காற்று வீசும் என பொருள்.

இரண்டாம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால் புயல் உருவாகியுள்ளது என எச்சரிப்பதற்காக ஏற்றப்படுகின்றது. இந்த எச்சரிக்கையினைக் கண்டால் துறைமுகத்தினை விட்டு கப்பல்கள் வெளியேற வேண்டும்.

மூன்றாம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால் திடீர் காற்றோடு மழை பொழியக் கூடிய வானிலையால் துறைமுகம் அச்சுறுத்தப்பட்டுள்ளது என பொருள்.

நான்காம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால் துறைமுகத்தில் காணப்படும் கப்பல்களுக்கு ஆபத்தாகும். (3ம் மற்றும் 4ம் கூண்டுகள் துறைமுகத்தில் மோசமான வானிலை நிலவுகின்றது என்பதனை தெரியப்படுத்துகின்றன)

ஐந்தாம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால் புயல் உருவாகி இருப்பதனைக் குறிக்கும் அத்தோடு துறைமுகத்தின் இடது பக்கமாக புயல் கடக்கும் என்பதற்கான எச்சரிக்கையாகும்.

ஆறாம் எண் எச்சரிக்கை கூண்டானது இது ஐந்தாவது எண்ணின் எச்சரிக்கை தான் ஆனால் துறைமுகத்தில் புயல் வலது பக்கமாக கரையை கடந்து செல்லும் நேரத்தில் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும் என எச்சரிக்கின்றது.

ஏழாம் எண் எச்சரிக்கை கூண்டானது ஏற்றப்பட்டால் துறைமுகம் வழியாகவோ அல்லது அருகிலோ புயல் கரையை கடக்கலாம் என்பதற்கான எச்சரிக்கை ஆகும். (5,6 மற்றும் 7ம் எண் கூண்டுகள் துறைமுகத்திற்கு ஏற்பட்டிருக்கும் அபாயத்தினை குறிக்கின்றது.)

எட்டாம் எண் எச்சரிக்கை கூண்டானது ஏற்றப்பட்டால் மிகுந்த அபாயம் என பொருள் அதாவது புயல் தீவிர புயலாகவோ அல்லது அதி தீவிர புயலாகவோ உருவெடுத்துள்ளது அப்போது புயல் துறைமுகத்தின் இடது பக்கமாக கரையை கடக்கும் என்று எச்சரிக்கின்றது.

ஒன்பதாம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால் புயல் தீவிர புயலாகவோ அதி தீவிர புயலாகவோ உருவெடுத்துள்ளது மேலும் துறைமுகத்தின் வலது பக்கமாக புயல் கரையை கடக்கும் என எச்சரிக்கின்றது.

பத்தாம் எண் எச்சரிக்கை கூண்டானது ஏற்றப்பட்டால் அதி தீவிர புயலானது உருவாகியுள்ளது என்றும் அது துறைமுகம் அல்லது அதன் அருகே கடந்து செல்லும் பெரிய அபாயம் ஏற்பட்டிருப்பதாக எச்சரிக்கின்றது.

புதினொறாம் புயல் எச்சரிக்கை தான் உச்சபட்சமானது இந்த எச்சரிக்கை விடப்படுகின்றது என்றால் வானிலை எச்சரிக்கை மையத்தினுடனான தகவல் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது எனப்பொருள் ஆகும்.

You May Also Like:

இந்திய பெருங்கடலின் ஆழமான பகுதி

மின்சாரத்தை கடத்தும் அலோகம் எது