மீண்டும் விஷாலுடன் இணையும் இயக்குநர்!-இந்த படமாவது கை கொடுக்குமா?

விஷால் நடிப்பில் ஹரி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் தான் ரத்னம். இப் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. வசூலும் பெரிதாக அமையவில்லை. ரசிகர்கள் மிகவும் எதிரபார்புடன் சென்றிருந்தனர். ஆனால் அவர்களுக்கு படம் பிடிக்கவே இல்லை.

ஹரியின் படமே இல்லை என்று தான் ரசிகர்கள் அனைவரும் கூறினர். ஹரியின் படங்கள் எல்லாம் அடுத்து அடுத்து விறுவிறுப்பாக வே செல்லும், ரசிகர்களும் இவ்வாறுதான் எதிர்பார்த்தபடி சென்றனர். அவர்கள் எதிர்பார்த்த எதுவுமே நடைபெறவில்லை. இதனால் இப் படத்திற்கு கலவையான விமர்சனமே கிடைத்து.

ஹரி இயக்கத்தில் விஷால் நடித்த தாமிரபரணி மற்றும் பூஜை ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் இந்த படம் சோதப்பி விட்டது.

ரத்னம் படத்திற்கு முன்பு விஷால் நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி நல்ல வரவேற்பை பெற்றது. ரசிகர்களிடம் இருந்தும் நல்ல விமர்சனகளே கிடைத்தது.

தற்போது அவர் அரசியலிலும் தனி கட்சியை ஆரம்பிக்க போவதாகவும் கூறியுள்ளார். இவர் இறுதியாக நடந்த தேர்தலிலும் விஜய்யை போல சைக்கிளில் சென்றுள்ளார். இதற்கு நீங்கள் விஜய்யை பின்பற்றுகிறீர்களா? என்று கேட்ட போது, இல்லை சத்தியமாக என்னிடம் வண்டி இல்லை அதனால் தான் சைக்கிளில் வந்தேன். என்று கூறினர்.

இவ்வாறு இருக்க மருது பட இயக்குநரான முத்தையாவுடன் இணையவுள்ளார். இப் படம் பற்றிய அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என கூறப்படுகின்றது.

more news