லியோ 2 கதை ரெடி!- விஜய் ஓகே சொல்வாரா?

தளபதி விஜய் நடிப்பில் 2023 ஆம் ஆண்டு லியோ படம் வெளியானது. இதில் இவருக்கு ஜோடியாக திரிஷா நடித்திருப்பார். சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந், ஜெனனி,மிஷ்கின், கௌதம் மேனன் ஆகியோரும் நடித்திருந்தனர். படத்தை லோகேஷ் இயக்க லலித்குமார் தயாரித்திருப்பார். இதில் வில்லனாக சாண்டி மாஸ்டர் நடித்து அசத்தியிருப்பார்.

தளபதி விஜய் தற்போது 68 வது படமான கோட் படத்தில் நடித்து வருகின்றார். இவர் தனது 69 வது படத்தோடு சினிமாவில் இருந்து விலகி அரசியலில் முழு கவனத்தையும் செலுத்தவுள்ளதாக அறிவித்துள்ளார். 69 வது படத்தை  பிரபல முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஹெச். வினோத் இயக்கப்போகிறார் என தகவல் வெளிவந்துள்ளது.

சமீபத்தில் விஜயின் இறுதி படம் கோட் என்றும் அதன் பின் இவர் அரசியலுக்குள் முழுமையாக சென்று விடுவார் என்றும் வதந்திகள் பரவியது. இந்நிலையில் தளபதி 69 குறித்தீ தனஞ்சயன் தளபதி கட்டாயம் 69 வது படத்தில் நடிப்பார் என்றும் கூறியிருந்தார், இருப்பினும் தளபதி 69 குறித்து எந்த விதமான அதிகரபிரவா தகவலும் வெளியாக வில்லை.

இந் நிலையில் லோகேஷ் கனகராஜ் இடம் லியோ 2 படம் பற்றி கேள்வி எழுப்ப அதற்கு அவர் கதை ரெடியா இருக்கு விஜய் ஓகே சொன்னால் அரம்பித்தி விடலாம் என்று கூறியுள்ளார். அரசியலுக்குள் நுழையும் விஜய் இதற்கு ஓகே சொல்வாரா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

more news