தமிழர் பண்பாடு கட்டுரை

tamilar panpadu katturai in tamil

மொழிக்கு இலக்கணம் வகுத்த தமிழர்கள் தங்களது வாழ்வுக்கும் இலக்கணம் வகுத்தே வாழ்ந்து வந்துள்ளனர். இந்த வகையில் உலகில் முதன்மையானதாகவும், சிறந்ததாகவும் தமிழர்களின் பண்பாடு காணப்படுகின்றது.

எம்முடைய முன்னோர்கள் சிறந்த கலாச்சாரத்தையும், பண்பாட்டு பழக்க வழக்கங்களையும் பின்பற்றி ஆரோக்கியமான ஒழுக்க நெறிமுறைகளோடான வாழ்வையே வாழ்ந்துள்ளனர்.

தமிழர்களின் முக்கியமான அடையாளங்களில் ஒன்றாக அவர்களுடைய பண்பாடு விளங்குகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழர் பண்பாடு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • தமிழர்களின் பண்பாடு
  • எதிர்நோக்கும் சவால்கள்
  • அழிந்து வரும் தமிழர் பண்பாடு
  • இளைய சந்ததியினரகளது கடமை
  • முடிவுரை

முன்னுரை

பொதுவாகவே மக்களுடைய செயற்பாட்டுக் கோலங்களையும், அத்தகைய செயற்பாடுகளுக்கு முக்கியத்துவத்தையும், சிறப்பு தன்மையும் வழங்கக்கூடிய குறியீட்டு அமைப்பையே பண்பாடு என நாம் வரையறை செய்கின்றோம்.

தமிழர்கள் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே தங்களுடைய பண்பாடுகளில் சிறந்து விளங்கியுள்ளனர் என்பதனை சங்க கால இலக்கியங்கள் எமக்கு மிகவும் தெளிவாக உணர்த்துகின்றன.

இவ்வாறான தொன்மையான வரலாறு கொண்ட தமிழர்கள் பண்பாடு பற்றி இக்கட்டுரையில் நோக்கலாம்.

தமிழர்களின் பண்பாடு

“அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்” என்ற குறளின் மூலமாக திருவள்ளுவர் அறத்தின் வழி மாறுதலே தமிழர்களின் பண்பாடு என்பதனை சுட்டிக்காட்டுகின்றார்.

மேலும் கனியன் பூங்குன்றனார் பாடிய “யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர் தர வாரா..” என்ற பாடலின் வழியும் தமிழர்களின் பண்பாடு உணர்த்தப்படுகின்றது.

அறம், பொருள், இன்பம், வீடு என்கின்ற விடயங்களை பின்பற்றி வாழ்வதே வாழ்க்கை என்பது தமிழர்களின் பண்பாடாகும்.

உறவினர்களை உபசரித்தல் மற்றும் வரவேற்றல், இன்சொல் பேசுதல், உயிர்களிடத்தில் அன்பு காட்டுதல், நன்றி மறவாமை, பெண்கள் முதியோர்களை மதித்தல் மற்றும் சிறுவர்களிடத்தில் அன்பு காட்டுதல் போன்றன தமிழர்களின் பண்பாட்டு அம்சங்களாக விளங்குகின்றன.

எதிர்நோக்கும் சவால்கள்

நாம் வாழக்கூடிய புதிய தொழில்நுட்ப யுகத்தில் தொன்மையான எம்முடைய பண்பாட்டை அவ்வாறே பின்பற்றுவதில் பல்வேறு சவால்கள் எழுந்த வண்ணமே உள்ளன.

இந்த வகையில் நோக்கும் போது இன்றைய உலகமயமாக்கல், மேலைநாட்டு கலாச்சார ஊடுருவல், தொடர்பாடல் வளர்ச்சி, நீண்ட பயணங்களின் தோற்றம் போன்ற பல்வேறு அம்சங்கள் தமிழர் பண்பாட்டில் சவால்களையும், மாற்றங்களையும் ஏற்படுத்துகின்றன.

அதன் அடிப்படையில் தமிழர்களின் ஆடை அணிகலன்கள், வைத்திய முறை, உணவு முறை, விருந்தோம்பல் போன்ற அனைத்திலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இவை தமிழர் பண்பாடுகளுக்கு ஏற்பட்டுள்ள சவாலாகவே காணப்படுகின்றன.

அரழிந்து வரும் தமிழர் பண்பாடு

உலகில் தோன்றிய எத்தனையோ பண்பாடுகள் காலத்தால் அழிந்து போய் உள்ளனவாக காணப்படுகின்றன.

ஆனால் தமிழர் பண்பாடானது தொன்மையான ஒன்றாகவும், தற்காலம் வரை பின்பற்றப்பட்டு வரக்கூடிய ஒன்றாகவும் காணப்படுகின்றது. இருந்த போதிலும் தற்காலங்களில் நாகரீக வளர்ச்சி, பிற மொழிக் கலப்பு, மேற்கத்திய கலாச்சார ஊடுருவல் போன்ற காரணங்களினால் அழிந்து கொண்டு வருவதனை காணலாம்.

தற்காலங்களில் அதிகமாக தமிழ் மக்களிடையே தமிழ் மொழி பற்று மறைந்து ஆங்கில மொழிமையான மோகமே அதிகரித்துள்ளது. அத்தோடு பிற கலாச்சார தாக்கங்களாலும் தமிழர் பண்பாட்டு தமிழர் ஆடையமைப்பு, உபசரிப்பு போன்ற பண்பாட்டு அம்சங்களிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே வருகின்றன.

இளைய சந்ததியினர்களது கடமை

உலகின் தொன்மையான பண்பாடுகள் ஒன்றான தமிழர்களின் பண்பாடுகளை அழிந்து போக விடாமல் முழுமையாக பாதுகாத்து அடுத்த சந்ததிகளுக்கு கடத்த வேண்டியது இளைய சந்தையினர்களது தலையாய கடமையாகும்.

இளைய சந்ததியினர்கள் எமது முன்னோர்கள் பின்பற்றி பாதுகாத்து வந்த பண்டிகைகள், விழாக்கள், பாரம்பரிய நிகழ்வுகள் போன்றவற்றை கொண்டாடுவதோடு, விருந்தோம்பல், உணவு பழக்க வழக்கம், ஆடை அமைப்பு போன்றவற்றினையும் பின்பற்றி அடுத்த சந்ததியினருக்கு முறையாக கற்றுக் கொடுப்பதுவும் இளைய சந்ததியினர்களது கடமையாகவே காணப்படுகின்றது.

முடிவுரை

தற்போதைய நவீன யுகமானது தமிழர்களினுடைய பெருமையும், பண்பாடும் குறைந்து கொண்டு வரக்கூடிய ஒரு கலிகாலமாகவே காணப்படுகின்றது. ஆகவே உலகுக்கே பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் சொல்லிக் கொடுத்த தமிழர்களின் பண்பாடும், பெருமைகளும் எப்பொழுதும் மறைந்து விடக்கூடாது.

எம்முடைய தமிழர் பண்பாட்டின் ஆழத்தை தற்கால சந்ததியினருக்கு சொல்லிக் கொடுப்பதோடு, அதனை கற்றுக் கொள்வதும், உரிய முறையில் எதிர்கால சந்ததிகளுக்கு கடத்துவதும் எம் ஒவ்வொருவரதும் பொறுப்பாகும்.

You May Also Like:

பொங்கல் திருநாள் கட்டுரை

வளர்ச்சி பாதையில் இந்தியா கட்டுரை