ஷங்கர் மகளின் திருமணத்திற்கு வந்து வாழ்த்திய ஸ்டாலின்!

இயக்குநர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யாவிற்கு இன்று இரண்டாம் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. நடந்து முடிந்த இந்த திருமணத்தில் பல திரைப்பிரபலங்கள் வந்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்தை கடந்த 2022ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இருப்பினும் அவர்களது திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலைக்கவில்லை. ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ரோஹித்துடன் சேர்ந்து வாழ மறுத்து விட்டார். ரோகித்திடம், ஐஸ்வர்யா முறையாக விவாகரத்தை பெற்றார்.

ஐஸ்வர்யா தன் தந்தையிடம் உதவி இயக்குநராக இருந்த தருண் கார்த்திகேயன் என்பவரை திருமணம் செய்துள்ளார்.

திருமண விழாவில் ரஜனி, கமல், விக்ரம்,விஜய், சூர்யா, கார்த்தி உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில் தேர்தலில் பரபரப்பாக ஈடுபட்டு கொண்டிருக்கும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உள்ளார்.

More News