சூர்யா, ஜோதிகா இருவருமே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக திகழ்பவர்கள். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரு குழந்தைகள் உண்டு. திருமணத்திற்கு பின் சினிமாவை விட்டு விலகிய ஜோதிகா மீண்டும் நடிகையாக களம் இறங்கியிருக்கிறார்.
திருமணத்தின் நீண்ட இடைவேளைக்கு பின் 36 வயதினிலே, ராட்சசி, மகளிர் மட்டும், உடன்பிறப்பே என தமிழில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள ஜோதிகாவிடம் உங்கள் மகன் தேவ் சினிமாவில் நடிப்பாரா என கேட்டதற்கு தற்பொழுது நடிக்க வாய்ப்பு இல்லை எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். படிப்பு முடிந்த பின்பு நடிக்க வேண்டும் என்று விரும்பினால் அது அவர்களுடைய விருப்பம் என்று பதிலளித்துள்ளார்.