இயற்கையை பாதுகாப்போம் கட்டுரை

iyarkai kappom katturai in tamil

எமக்கு கிடைக்கப்பெற்ற அருட்கொடைகளுள் முக்கியமானதொன்றே இயற்கையாகும். இத்தகைய இயற்கையின் மூலமாகவே நாம் இன்று இவ்வுலகில் சிறப்பாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இயற்கையை பாதுகாத்தல் அனைவரதும் கடமையாகும்.

இயற்கையை பாதுகாப்போம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • இயற்கையின் முக்கியத்துவம்
  • இயற்கை மாசடைவதற்கான காரணங்கள்
  • இயற்கை அழிவு
  • இயற்கையை பாதுகாத்தல்
  • முடிவுரை

முன்னுரை

மனிதனானவன் தன்னுடைய வாழ்வில் இயற்கையினுடாகவே பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றான்.

இப்பூமியில் வாழ்வதற்கான அடித்தளமே இயற்கை வழங்கியுள்ள அருட்கொடையாகும். அதாவது நாம் சுவாசிப்பது முதல் எமது அன்றாட தேவைகள் முதல் அனைத்து செயற்பாடுகளின் போதும் இயற்கையே துணை நிற்கின்றன.

இயற்கையின் முக்கியத்துவம்

மனித வாழ்வானது இயற்கையோடு இணைந்ததாக காணப்படுகிகின்ற போதே ஆரோக்கிமானதொரு வாழ்க்கையாக திகழும்.

நீர், நிலம், ஆகாயம், காற்று, நெருப்பு போன்ற இயற்கையான பஞ்சபூதங்கள் அனைத்தும் எம் அன்றாட தேவைகளில் முக்கியத்துவம் பெறுபவை ஆகும்.

உயிர் வாழ்வது தொடங்கி மன அழுத்தங்களை குறைப்பது வரை எமது அன்றாட தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளவும் இயற்கையே உதவி செய்கின்றது.

இயற்கை மாசடைவதற்கான காரணங்கள்

எமக்கு விலைமதிப்பற்ற வளங்களை அளிக்ககூடிய இயற்கையானது பல காரணங்களால் இன்று மாசடைந்து கொண்டு வருகின்றது. அதாவது இயற்கையின் மாசடைவிற்கு பிரதானமான காரணம் மனிதர்களது செயற்பாடுகளே ஆகும்.

மனிதானவன் பல்வேறு தொழிற்சாலைகளை அமைக்கும் நோக்கில் காடுகளை அழிக்கின்றான் இதன் காரணமாக சூழலானது அழிவுக்குட்படுகின்றது.

மேலும் கழிவுகளை நீர் நிலையில் இடல், நெகிழிப்பாவனை, மண்வளம் சுரண்டப்படல், வாகனப்புகை, மரங்களை வெட்டுதல், இரசாயண கிருமிநாசினிகளின் பயன்பாடு என பல்வேறு செயற்பாடுகளால் இயற்கையானது மாசடைந்து கொண்டு வருகின்றது.

இயற்கை அழிவு

இன்று பல்வேறு வகையான இயற்கை அழிவுகள் ஏற்படுகின்றதாயின் அதற்கானதொரு பிரதானமான காரணம் மனிதர்களே ஆவர். அதாவது மனிதனானவன் மண்வளத்தை சுரண்டுவதன் மூலமாக மண்சரிவு ஏற்படுகின்றது.

அதேபோன்று காடுகள், மரங்களை அழித்து மழை வளத்தினை குன்றச் செய்து வறட்சி ஏற்பட காரணமாகின்றான். இதன் காரணமாக இன்று பருவநிலை மாற்றங்கள் மாறி மாறி இடம் பெறுவதோடு பல்வேறு நோய்களுக்கும் இயற்கை அழிவுக்கும் மனிதர்கள் இலக்காகி வருகின்றனர்.

அதாவது சூறாவளி, சுனாமி போன்ற பேரழிவுகள் இடம்பெறுகின்றன. இத்தகைய இயற்கை அழிவில் இருந்து எம்மை காக்க வேண்டுமாயின் இயற்கையை நேசிக்க கற்று கொள்ள வேண்டும்.

இயற்கையை பாதுகாத்தல்

உலகில் வாழும் ஒவ்வொருவரதும் பிரதானமான கடமை இயற்கையை பாதுகாப்பது ஆகும். 1980ம் ஆண்டு பன்னாட்டு பாதுகாப்பு சங்கம் என்ற ஒன்று இயற்கையை பாதுகப்பதற்காக உருவாக்கப்பட்டமை சிறப்பிற்குரியதாகும்.

இன்று எம்மை காக்கும் இயற்கையை நாமும் காக்க வேண்டும். அதாவது நெகிழி பாவனையை அடியோடு ஒழித்தல், அதிக மரங்களை நடல், மண்வளத்தை பாதுகாத்தல், கழிவுகளை உரிய முறையில் அகற்றுதல், இயற்கை வளங்களை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பயன்படுத்துவதற்கான சட்டங்கள் கொண்டுவரப்படல் என பல்வேறு இயற்கையை பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமே இயற்கையை பாதுகாக்க முடியும்.

முடிவுரை

இயற்கை இன்றேல் மனிதர்களும் இல்லை என்றே கூற முடியும் அந்த வகையில் மனித வாழ்வே இயற்கையிலே தங்கியுள்ளது. ஒவ்வொரு தனிமனிதனும் இயற்கையை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதோடு இயற்கையை நேசிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும்

You May Also Like:

இயற்கை அனர்த்தங்கள் கட்டுரை

இயற்கையும் மனித வாழ்வும் கட்டுரை