தக் லைஃப் படத்தில் ஜெயம் ரவிக்கு பதிலாக நடிக்கவிருக்கும் அசோக் செல்வன்!

தக் லைஃப் படமானது மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகவுள்ளது. இப் படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கின்றது.

இப் படத்தில் சிம்பு மற்றும் திரிஷா நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சிம்புவிற்கு ஜோடியாகத்தான் திரிஷா நடிக்கவுள்ளார்.

சிம்பு நடித்த படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. இவர் நடித்த மாநாடு, பத்து தல போன்ற படங்கள் மாபெரும் வெற்றியை பெற்றன.

ஆரம்பத்தில் ஜெயம்ரவி, துல்கர் சல்மான் ஆகிய இருவரும் நடிப்பதற்கு ஒப்பந்தம் போட்டு பின்னர் விலகியதாகவும் தகவல் கசிந்தது.

ஜெயம்ரவி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர். மற்றும் துல்கர் சல்மான் மலையாளத்தில் ஒரு கலக்கு கலக்கி வருபவர். சமீப காலமாக இவர் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் கதாநாயகனாக நடித்து வருகின்றார்.

இந்நிலையில் ஜெயம்ரவி, துல்கர் சல்மான் ஆகிய இருவருக்கும் பதிலாக சிம்பு மற்றும் அரவிந்தசாமி இருவரும் நடிக்க போவதாக அறிவிக்கபட்டது. தற்பொழுது ஜெயம்ரவி, துல்கர் சல்மான் இருவரும் தாம் இப் படத்தில் நடிக்கின்றோம் என முன் வந்துள்ளனர் என்ற வதந்திக்களும் பரவி வந்தன.

சிம்பு நடிப்பதாக தெரியவந்ததும் அது பொய்யான விடயம் என்று ரசிகர்கள் ஏற்றுக்கொண்டனர்.

படபிடிப்பின் போது எடுக்கபட்ட புகை படங்கள் சமுகவலைதளங்களில் பரவி வருகின்றன. சிம்பு ஒரே டேக் இல் நடித்து முடித்துள்ளாராம். இதை மணிரத்னம் மிகவும் ஆச்சரியத்துடன் பார்த்தார். அவருக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு இருக்க ஜெயம் ரவிக்கு பதிலாக அரவிந்தசாமி நடிக்கபோவதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது ஜெயம் ரவிக்கு பதிலாக அசோக் செல்வன் நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஓ மை கடவுளே என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

இப்படம் சிம்பு மற்றும் அசோக் செல்வன் ஆகியோரின் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக இருக்கும் என கூறப்படுகின்றது.

more news