சம்பளத்தை இரு மடங்காக்கிய நயன்தாரா!- அக்கா ரோலில் நடிக்க 20 கோடியா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. டயானா மரியா குரியன் என்ற இவரின் பெயரை சினிமாவிற்காக நயன்தாரா என்று மாற்றிக்கொண்டர்.

2003 ஆம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமான நயன்தாரா, 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகம் ஆனார்.

இவர் பெண்களை மையமாகக் கொண்டிருக்கும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழ் சினிமாவில் 2010 களில் தொடங்கி இன்று வரை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கபடுகின்றார்.

இவருடைய தாய்மொழி மலையாளமகா இருப்பினும் இவர் தமிழ் சினிமாவிலேயே அதிகம் ஈடுபட்டு வருகின்றார். நயன்தாரா விக்னேஷ் சிவனை காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்து இரு குழந்தைகளுக்கு தாயாகி விட்டார்.

இவர் நடித்த படங்கள் எல்லாம் தோல்வியில் முடிந்தன. அன்னபூரணி படமும் ஓடிடி யில் வெளியானது. அப்படம் குறித்து பிராமணியர்கள் சர்ச்சையை ஏற்படுத்த இதுவும் ஓடிடி யில் இருந்து தூக்கபட்டது.

நயன் ஷாருக்கான் நடிப்பில் வெளியான யவான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்திருப்பார். இப் படம்ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

தற்போது படவாய்ப்பு இல்லாமல் பிஸினஸில் இறங்கி விட்டார். ரேஸ்ட்ரோரன்ட், நப்கீன் போன்ற பிஸினஸ்களில் இறங்கி விட்டார்.

இவ்வாறு இருக்க யாஷ் நடிக்கும் படத்தில் நயன் யாஷ்ற்கு தங்கையாக நடிக்கவுள்ளாராம் என்று ஆரம்பத்தில் தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது அக்கா ரோலில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

இவ்வாறு இருக்க இவர் நடிப்பதற்கு 10 கோடி சமம்பளம் வாங்கி வந்தார். தற்போது அதை இரு மடங்காக்கி 20 கோடி சம்பளம் கேட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

more news