பகத் பாசிலின் நடவெடிக்கையை பார்க்க ரொம்பவே பயமா இருக்கு!- நஸ்ரியாவின் பேட்டி

மலையாள நடிகரான பகத் பாசில் தமிழ் சினிமாவில் வேலைக்காரன் படத்தின் மூலம் அறிமுகமானார். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வேலைக்காரன் படத்தின் மூலம் வில்லனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

இவரது தந்தையான ஃபாசில் மலையாளத் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் 2002 ஆம் ஆண்டு இவரது தந்தை ஃபாசில் இயக்கிய கையெத்தும் தூரத்து எனும் திரைப்படத்தில் அறிமுகமானார்.

இவர் 2011 ஆம் ஆண்டு கேரளா மாநில அரசின் இரண்டாவது சிறந்த நடிகர் எனும் விருதினைப் பெற்றார்.

பின்னர் வித்தியாசமான கதைகளை தெரிவு செய்து நடிக்க ஆரம்பித்தார். அது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற இன்று பெரிய நடிகராகி விட்டார்.

தற்போது தமிழில் விக்ரம் மற்றும் மாமன்னன் போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களையும் ஈர்த்து விட்டார். பின்னர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜனி நடிப்பில் உருவாகி வரும் வேட்டையன் மற்றும் அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா 2 படத்திலும் நடித்து வருகின்றார்.

இவர் நடித்த ஆவேசம் எனும் மலையாள திரைப்படம் சமீபத்தில் வெளியானது. அந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை மிகவும் கவந்து விட்டார். 100 கோடிக்கும் அதிகமாக வசூல் சாதனை படைத்துள்ளது. சமீபத்தில் அவரை பார்ப்பதற்கு ரசிகர்கள் கூட்டம் குவிந்த நிலையில் எடுக்க பட்ட புகை படமும் வைரல் ஆகி வருகின்றது.

சமீபத்தில் தனக்கு ஏ.டி.ஹெச்.டி நோய் இருப்பதாக ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கூறி அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். இந்த நோய் வந்தால் கவனக்குறைபாடு, ஞாபக மறதி போன்ற பாதிப்புகள் ஏற்படும் என சொல்லப்படுகிறது.ஒரே விடையத்தை தொடர்ச்சியாக செய்ய மாட்டார்கள்.

இந்த நோயை சிறுவயதில் வந்தால் மாற்றி கொள்ளலாம். ஆனால் இவருக்கு தற்போது தான் கண்டுபிடிக்கபட்டுள்ளது. இதை பற்றி இவர் வைத்திய ஆலோசனைகளையும் பெற்று வருகின்றார்.

இவ்வாறு இருக்க இவருடைய மனைவி நஸ்ரியா பேட்டி ஒன்றில் இவரை பற்றி கூறியுள்ளார். ஆரம்பத்தில் நஸ்ரியா இவரை திருமணம் செய்து கொள்ளும் போது 20 அதிகமான ஒருவரை எதற்காக திருமணம் செய்தீர்கள் என்று கேள்வி எழுப்ப ஆரம்பித்து விட்டனர்.

இவர் நடித்த ராஜா ராணி படத்தில் ரசிகர்களை கவர்ந்த நிலையில் இவருந் திருமணதிற்கு எதிராக ரசிகர்கள் விமர்சனங்கள் செய்து வந்தனர். இருப்பினும் இவர்கள் இருவரும் மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வருகின்றனர்

இவர் பேட்டியில், இவர் படங்களில் ஒரு பாத்திரத்தை ஏற்று நடித்து விட்டு அதிலிருந்து வெளிவர ரொம்பவே கஷ்டபடுவார். கண்ணாடி முன்பாக சிரிப்பார், பாத்ரூமில் கத்துவார். அவற்றை பார்க்கும் போது எனக்கு பயமாக இருக்கும் போக போக அது பழகி விட்டது என்று கூறியுள்ளார்.

more news