உண்மை வேறு சொல்

unmai veru sol in tamil

இன்று உலகில் பல்வேறு சாதனைகளை படைத்தவர்கள் உண்மை பேசுபவர்களாகவே காணப்படுகின்றனர். உண்மை பேசுவதே சிறந்த ஒழுக்கமாகும்.

மனிதர்களாகிய நாம் உண்மையை கடைபிடிக்கின்ற போதே எமது வாழ்க்கையை சிறப்பாக வாழ முடியும். அந்தவகையில் உள்ளதை உள்ள படி பேசுவதே உண்மையாகும்.

உண்மை வேறு சொல்

  • வாய்மை
  • நேர்மை
  • மெய்
  • சத்தியம்

உண்மையின் உயர்வு

உண்மையினால் உயர்ந்தவர்கள் பலர் இன்று காணப்படுகின்றனர். ஒரு மனிதனின் வாழ்வானது உயர வேண்டுமாயின் உண்மை பேசுவது அவசியமானதாகும். அந்த வகையில் மகாத்மா காந்தி, காமராஜர் போன்ற உண்மை மிக்க மனிதர்களே இன்று அனைவராலும் போற்றப்பட்டு வருகின்றனர்.

வாய்மை எனப்படுவது யாதெனில் யாதொன்றும் தீமை இலாத சொலல் என்ற குறளானது பிறருக்கு தீங்கு விளைவிக்காத செயலே உண்மையாகும் என்பதை எடுத்துக் கூறுகின்றது.

உண்மையின் அவசியம்

உண்மையின் அவசியம் பற்றி பல்வேறு கருத்துக்கள் காணப்படுகின்றன. அந்த வகையில் பாரதியாரானவர் பொய் சொல்லக் கூடாது பாப்பா என்று பாடியுள்ளமையானது உண்மையை பேச வேண்டும் என்பதனையே சுட்டி நிற்கின்றது.

ஒளவையார் தனது நூலில் நெஞ்சாரப் பொய்தனை சொல்ல வேண்டாம் என்று கூறுவதினூடாக உண்மையை செல்வதன் மூலமே நாம் சிறந்த சிந்தனையுடையவர்களாக காணப்பட முடியும் என்பதனை எடுத்துரைக்கின்றார்.

You May Also Like:

வரி வேறு சொல்

மூங்கில் வேறு சொல்