சிம்பு திருமணம் செய்தால் தான் நானும் திருமணம் செய்வேன்!- சீரியல் நடிகை

நடிகர் சிம்பு தற்போது தக்லைஃப் படத்தில் நடித்து வருகின்றார். லிட்டில்  சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் இவர் டி. ராஜேந்திரனின் மகன் ஆவார். சிம்பு குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

2002 ஆம் ஆண்டு இவருடைய தந்தை இயக்கிய படமான காதல் அழிவதில்லை எனும் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார்.

இவர் இறுதியாக நடித்த பத்து தல மற்றும் மாநாடு போன்ற படங்கள் மாபெரும் வெற்றி படங்களாக மாறின. தற்போது நடித்து வரும் தக்லைஃப் படத்தில் மிகவும் நன்றாக நடித்துள்ளார். இவரின் நடிப்பை பார்த்து இயக்குனர் மணிரத்னம் பாராட்டியுள்ளார்.

தக் லைஃப் படத்தின் படபிடிப்பு காரணமாக இவரின் அடுத்த படங்கள் தடைப்பட்டு வருகிறது. இவ்வாறு இருக்க கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு இவருடைய 48 வது படம் பற்றி அப்டேட் வெளியானது.

அதில் இவர் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளதாக போஸ்டரில் வெளியானது. ஹீரோவாகவும் வில்லனாகவும் நடிக்கவுள்ளார். ஜான்வி கபூர் மற்றும் கியாரா அத்வானி ஆகிய நடிகைகளும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் கசிகின்றன. இப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். இப் படத்தின் படப்பிடிப்புகள் இன்னும் ஆரம்பவிக்கவில்லை.

இந் நிலையில் சீரியல் நடிகை சிம்புவை பற்றிய வீடியோ ஒன்றை வெளியீட்டுள்ளார். சின்னதம்பி சீரியலில் நடித்த ரேமா அசோக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அதில் சிம்புவுக்கு எப்போது திருமணம் நடக்கிறதோ அப்போது தான் எனக்கும் திருமணம் நடக்கும் என்று கூறியுள்ளார்.

more news