சைந்தவி ஜிவி பிரகாஷை யூஸ் பண்ணிட்டாங்க!- உமாபதி பேட்டி

ஜிவி பிரகாஷ், சைந்தவி இருவருமே சினிமா பிரபலங்கள். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரின் பிரிவு ரசிகர்களை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இவர்களின் காதல் இவ்வாறு விவகாரத்தில் முடியும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.

இவர்கள் இருவரும் பள்ளி காதலர்கள். இருவரும் தமது பள்ளி பருவத்தில் இருந்து காதலித்து வந்த நிலையில் 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு திருமணம் ஆகி ஏழு வருடங்கள் கழிந்த நிலையில் ஒரு அழகிய பெண்குழந்தை பிறந்தது. அக் குழந்தைக்கு அன்வி என்று பெயர் வைத்து மகிழ்ச்சியாகவாழ்ந்து வந்தனர்.

தற்போது தமது 11 வருட திருமண வாழ்க்கையை முடித்து கொள்ள முடிவு செய்து விட்டனர். தமது விவாகரத்தையும் அறிவித்து விட்டனர். இவர்களின் விவாகரத்தின் காரணம் என்ன என்று அனைவரும் கிழற ஆரம்பித்து விட்டனர். அனைவரும் இவர்களின் பிரிவிற்கு தனுஷ், ஜிவி நட்பு மற்றும் இவர் நடிக்க வந்தது தான் காரணம் என்றும் கூறி வருகின்றர்.

இந் நிலையில் பத்திரிகையாளர் உமாபதி ஒரு யூடியூப் சனல் ஒன்றிக்கு பேட்டியளித்துள்ளார். அவர் சைந்தவியை தாக்கி பேசியுள்ளார். பிரபலங்களை திருமணம் செய்துகொண்டு சொகுசான வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு கடைசியில் தனியாக சென்றுவிடுவார்கள்.

ஜிவியை பிரிந்த பிறகு சைந்தவி நிறைய பணம் வாங்கிவிட்டார். இவ்வளவு நாள் வாழ்ந்துவிட்டு எவ்வளவோ சொத்துக்களை அடித்துவிட்டு வந்தார் என்று பேசியிருக்கிறார். அவருடைய பேட்டியை பார்த்த சைந்தவி ரசிகர்கள் உமாபதியை திட்டி வருகின்றனர். அது அவர்களுடைய தனிப்பட விருப்பம் என்று கூறி சைந்தவிக்கு ஆதாரவாக பேசி வருகின்றனர்.

more news