மனிதர்களில் பல வகை குணமுடையவர்கள் காணப்படுவர். அந்த வகையில் சில மனிதர்கள் தலைக்கனமுடையவர்களாக இருப்பார்கள்.
அதாவது தலைக்கனத்தோடு காணப்படுபவர்கள் பிறரை மதிக்காது செயற்படுவார்கள் என்பதே உண்மையாகும். இவ்வாறானவர்கள் தனக்கு தான் அனைத்தும் தெரியும் என்று வாதிடக் கூடியவர்களாகவும் திகழ்வார்கள்.
தலைக்கனம் என்ற பதத்திற்கு எடுத்துக்காட்டாக நான் தான் அதிகமாக படித்தவன், என்னிடம் தான் அதிகமாக பணம் இருக்கின்றது என பல்வேறு வகையில் கூறக் கூடியவர்களாக காணப்படுவார்கள்.
தலைக்கனம் வேறு சொல்
- அகந்தை
- திமிர்
- அகங்காரம்
- இறுமாப்பு
- கர்வம்
- மமதை
- தெனாவட்டு
- பெருமிதம்
- ஆவலிப்பு
தலைக்கனமிக்கவர்களின் நிலை
தலைக்கனமிக்கவர்களின் வாழ்வானது ஓர் நிம்மதியற்ற நிலையினை கொண்டதாக அமையும். மேலும் இவர்களின் தலைக்கனமே இறுதியில் இவர்களை அழிக்கும் ஆயுதமாக மாறுவதோடு தனது தொழில் ரீதியான விடயங்களிலும் பல்வேறு இழப்புக்களை ஏற்படுத்தக் கூடியதாகவும் காணப்படுகின்றது.
You May Also Like: