ஹிப் ஹாப் ஆதியின் PT சார் படம் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் ஹிப் ஹாப் ஆதியின் நடிப்பில் வெளியான படம் தான் பிடி சார். இப் படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.

ஹிப் ஹாப் ஆதி மீசையை முறுக்கு படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகராக அறிமுகமானார். இப் படம் ரசிகர்களால் பெரிதும் வரவேற்பை பெற்றது. அதுவும் மாணவர்கள் ஆதியை கொண்டாடி வந்தனர்.

அதன் பின் இவர் நடித்த படங்கள் எதுவும் பெரிய வரவேற்பை பெறவில்லை. தற்போது வெளியான அரண்மனை 4 படத்திற்கு இவர் தான் இசையமத்துள்ளார். இப் படத்தின் வெற்றிக்கு இவருடைய இசையும் ஒரு முக்கியமான பங்கை வகிக்கின்றது.

இவ்வாறு இருக்க இவர் நடிப்பில் நேற்று பிடி சார் படம் வெளியானது.

இப் படத்தின் கதை நன்றாக இருந்தாலும் படத்தை எடுத்த முறை நன்றாக இல்லை என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். இப் படத்தில் ஆதியுடன் இணைந்து பிரபு, அனிகா, காஷ்மீரா,ராஜா, பாக்கியராஜ் போன்றோர் நடித்திருப்பார். இவருக்கு ஜோடியாக காஷ்மீரா நடித்திருப்பார்.

இப் படத்தில் பெண்களுக்கு நடக்கும் பாலியல் கொடுமை பற்றியே படமாக எடுக்க பட்டது. இப் படத்த்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் அனிகா நடித்திருப்பார். அவரை சுற்றி படம் நகர்வதால் அவர் நன்றாகவே நடித்திருப்பார்.

ஆதியின் நடிப்பில் நல்ல முன்னேற்றம் தெரிகின்றது என்றும் ரசிகர்கள் கூறிவருகின்றனர். அது மட்டுமல்லாது இப் படத்தில் பாடல்கள் மற்றும் இசை நன்றாக இருக்கின்றது என்றும் கூறியுள்ளனர்.

இவ்வாறு இருக்க தற்போது இப் படத்தின் முதல் நாள் வசூல் வெளியாகியுள்ளது. இப்படம் முதல் நாள் 70 லட்ஷத்தை எட்டியுள்ளது. இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதால் இரு நாட்களின் வசூல் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

more news