விஜய் டிவியில் ஒளிபரப்பாக்கிவரும் ரியாலிட்டி ஷோ தான் பிக்பாஸ்.
பிக்பாஸ் (தமிழ்) வரலாற்றிலே மிகவும் விறுவிறுப்பாக்க நடந்த ஷோ என்றாலே அது பிக்பாஸ் சீசன்-1 தான் என்று பிக்பாஸ் ரசிகர்கள் கூறுவார்கள்.
பிக்பாஸ் சீசன்-1 இல் ஆராவ், ஓவியா, கணேஷ் ,காயத்திரி ,சினேகன், ஹரிஸ் போன்ற பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில் மிகவும் விறுவிறுப்பாக இடம் பெற்றது.
இந்நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர் தான் ஆராவ் . இவர் தற்பொழுது தல அஜித் இன் விடமுயற்ச்சி படத்தில் முக்கிய காதபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கியுள்ளார்.
சமீபத்தில் “விடாமுயற்சி” படப்பிடிப்பின்போது அஜித், ஆரவ் ஆகிய இருவரும் காரில் சென்றபோது கார் விபத்திற்கு உள்ளான காணொளி அனைத்து ரசிகர் மத்தியிலும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நடிகர் அஜித் ரசிக்கர்கள் மற்றும் ஆராவ் ஆகியோருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தும் விடயம் ஒன்றை செய்துள்ளார். நடிகர் அஜித் ஆராவ்க்கு ரூபாய் 35 லட்சம் மதிப்புள்ள பைக் ஒன்றை பரிசளித்துள்ளார். இந்நிகழ்வு ஆரவ்வை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.