கருடனை தாண்டிய மகாராஜா!- இதுவரை வசூல் எத்தனை கோடி தெரியுமா?

தமிழ் சினிமவில் முன்னணி நடிகர்களில் விஜய் சேதுபதியும் ஒருவர். இவர் சினிமாவில் முக்கிய நபராக பார்க்கபடுகின்றது. சினிமாவிற்கு எந்தவொரு பின்புலமும் இல்லாமல் வந்தவர்களில் இவரும் ஒருவர்.

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தில் ஒரு குத்து சண்டை பார்வையாளராக சினிமாவிற்குள் அறிமுகமாகி பின்னர் கிடைக்கின்ற வாய்ப்புகள் எல்லாவற்றையும் பயன்படுத்தி சின்ன சின்ன பத்திரங்கள் எல்லாவற்றையும் ஏற்று நடித்து வந்தார். பின்னர் தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் கிரோவாக என்றி கொடுத்தார்.

சுந்தர பாண்டியன் படத்தில் வில்லனாக நடித்து சிறந்த வில்லனுக்கான விருதையும் பெற்றிருப்பார். அதனி தொடர்ந்து விக்ரம் வேதா, சேதுபதி றெக்க,கவண், நானும் ரௌடி தான், இறைவி , தர்மதேவி, 96 போன்ற படங்களிலும் சிறப்பாக நடித்திருப்பார்.

பின்னர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்திலும் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படத்திலும் வில்லனாக நடித்திருப்பார். தற்போது தெலுங்கிலும் நடித்து வருகின்றார்.

தற்போது இவர் நடிப்பில் மகாராஜா படம் வெளியானது. இது மாடிகள் நாளே பெரும் வரவேற்பை பெற்றது. படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து பாலிவுட் இயக்குனரும், நடிகருமான அனுராக் காஷ்யப் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் நட்டி நட்ராஜ், மம்தா மோகன்தாஸ், சிங்கம் புலி, அபிராமி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இதுவரை படம் 50 கோடிகக்கும் மேல் வசூல் செய்துள்ளது. எப்படியும் இந்த வார இறுதியில் வசூல் 70 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகின்றது.

சூரியின் கருடன் படம் 50 கோடி வசூல் செய்துள்ளது. கருடனை மகாராஜா படம் வென்றுவிட்டது.

more news