தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் நயன்தாராவும் ஒருவர். நாயகிகளில் அதிக சம்பளம் வாங்கும் பெண் இவர்தான். இவர் ஒரு படத்திற்கு பத்து தொடக்கம் பதினைந்து கோடி வரை சம்பளம் வாங்கி வருகின்றார்.
திருமணத்திற்கு பின் இவர் பெரிய படவாய்ப்புகளை நழுவ விட்டு விட்டார். இவரின் இடத்தில் தற்போது திரிஷா வந்து விட்டார். திருமணம் ஆன பின்பு நாயகியாக நடிக்கும் நடிகையும் இவரே இருபினும் இவருக்கான மார்க்கெட் குறைந்து வருவதும் உண்மையே.
சமீபத்தில் நடிகர் யாஷ் நடிக்கும் படத்தில் அவருக்கு அக்கவாக நயன் நடிக்க ஒத்து கொண்டதாகவும் அதற்கு 20 கோடி சம்பளம் கேட்டதாகவும் கூறபடுகின்றது. பின்னர் அவர் மறுத்து விட்டார் என்றும் தகவல் வெளியானது.
இவ்வாறு இருக்க தற்போது கவினுடன் இணையவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் கவின் சின்ன திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்தவர். `இவர் நடித்த லிப்ட் மற்றும் டாடா படங்கள் இவருக்கு நல்ல வெற்றியை கொடுத்தன. இவர் இறுதியாக நடித்த ஸ்டார் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
இருப்பினும் இவருக்கு பல படவாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளது. கிஸ் திரைப்படம், நெல்சன் தயாரிப்பில் வெளியாகும் பிளடி பெக்கர் திரைப்படம், மாஸ்க் திரைப்படம் என வரிசையாக நிறைய படங்களில் நடித்து வருகின்றார்.
இப்படங்களைத் தொடர்ந்து கவின் நடிப்பில் உருவாக இருக்கும் அடுத்த திரைப்படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்க இருக்கிறது. இப்படத்தை விஷ்ணு இடவன் இயக்க இருக்கிறார். இப் படத்தில் கவினுடன் நயன்தாராவும் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.
இருப்பினும் அவருக்கு ஜோடியாகவா? இல்ல வேறு கதாபாத்திரமா? என்பது பற்றிய அறிவித்தல் என்னும் வெளியாகவில்லை.