இன்று உலகெங்கிலும் காணப்படுகின்ற தமிழ் மக்கள் வெகு விமர்சையாக கொண்டாடும் ஒரு பண்டிகையே பொங்கல் பண்டிகையாகும். அந்தவகையில் இப்பண்டிகையானது உழைக்கும் மக்களின் தெய்வமான சூரியனுக்கும் ஏனைய உயிர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் முகமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
இப்பொங்கல் திருவிழாவானது தை மாதம் கொண்டாடப்பட்டு வருவதோடு பண்டிகைக்கு முதல் நாளே புதிய ஆடை, புதிய பானை வாங்கி பண்டிகையை கொண்டாட தயாராகுவர்.
பொங்கல் பண்டிகை வேறு பெயர்கள்
- அறுவடை திருநாள்
- உழவர் திருநாள்
- தமிழர் திருநாள்
- மகரசங்கராந்தி
- உத்தராயன்
- சூரிய பொங்கல்
பொங்கல் வைக்கும் முறை
பொங்கல் நாளிற்கு சில நாட்களுக்கு முன்பே அனைவரும் தயாராகுவதோடு அதற்கு தேவையான பொருட்களையும் ஆயத்தப்படுத்தி கொள்வர். மேலும் வீட்டின் முன் புது அடுப்பு வைத்து புதுப் பானையில் அரிசியிட்டு முற்றத்தில் பொங்கல் வைப்பார்கள்.
பொங்கல் பண்டிகையின் சிறப்புக்கள்
உழைக்கும் மக்களுக்கும் அதற்கு உதவிய இயற்கைக்கும் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் சிறப்பு நாளாக பொங்கல் பண்டிகை காணப்படுகின்றது.
மேலும் ஒற்றுமையை பறைசாற்றும் நாளாகவும் அனைவருடைய வாழ்விலும் மாற்றத்திற்கு வித்திடக்கூடியதாகவும் இப்பண்டிகை அமைந்துள்ளமை சிறப்பிற்குரியதாகும்.
You May Also Like: