இன்று பல்வேறு சாதனைகளை படைப்பதற்கு பிரதான காரணம் தனது அறிவினை சிறந்த முறையில் பயன்படுத்தியமையே ஆகும். அந்த வகையில் ஏதேனும் ஒரு விடயம் பற்றி அறிந்திருத்தல் மற்றும் கண்டுபிடித்தல் அல்லது கற்றலே அறிவாகும்.
மேலும் அறிவானது ஒருவரின் பிறப்பு முதல் இறப்பு வரை கிடைக்கக் கூடியதாக காணப்படுகின்றன. அந்தவகையில் அறிவு என்பதானது ஒன்றைப் பற்றிய பரீட்சயமான தன்மையினையே சுட்டி நிற்கின்றது எனலாம்.
“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு”
என வள்ளுவரானவர் புது விடயங்களை கற்று ஆய்வு செய்பவர்களேயே அறிவில் சிறந்தவர்களாக கருதுகின்றனர் என்கிறார்.
அறிவு வேறு சொல்
- மதி
- ஞானம்
- விவேகம்
- புத்தி
- மேதை
- மதி நுட்பம்
அறிவுடையவர்கள்
ஏனைய உயிரினங்களிடமிருந்து மனிதனை வேறுபடுத்தும் முக்கியமானதோர் விடயமே பகுத்தறிவாகும். அந்த வகையில் பகுத்தறிவின் மூலமே மனிதனானவன் நன்மை, தீமை என்பவற்றை பிரித்தறிந்து கொள்கின்றான். மேலும் அறிவுடையவர்களே இன்று கல்வியில் சிறந்து விளங்குபவர்களாகவும் சமூகத்தில் நன்மதிப்புடையவர்களாகவும் திகழ்கின்றனர்.
அறிவின் அவசியம்
அறிவானது அனைவருக்கும் அவசியமானதொன்றாக காணப்படுகின்றது. மேலும் அறிவற்றவர்களது வாழ்வானது ஓர் இருண்ட பாதையை நோக்கி செல்கின்றது என்பதை திருக்குறளானது பின்வருமாறு கூறுகின்றது.
“அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்கும் செய்தல் அரிது”
You May Also Like: