பிடி சார் படம் விமர்சனம்!

கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிப்பில் வெளியான படம் பிடி சார். இப் படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டல்நேசினல் நிறுவனம் தயாரித்துள்ளது.

கதை

இரண்டு வருடங்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி ஒருவரது மரணம் கடும் அதிர்வலைகளையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது. அதை மையமாக வைத்து இப் படம் எடுக்கபட்டுள்ளது.
தவறு செய்பவர்களை சட்டத்திற்கு முன் கொண்டு வந்து நிறுத்தி உரிய தண்டனை வாங்கித் தர வேண்டும் என்பதுதான் இப்படத்தின் கருத்து. நமக்கென்ன என்று ஒதுங்கிப் போகாமல் அடுத்தவர் கஷ்டத்திலும் பங்கு கொள்ள வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

ஈரோட்டில் ஒரு பெரிய தனியார் பள்ளியில் பி.டி. ஆசிரியராக இருக்கிறார் ஆதி. அவருடைய எதிர்வீட்டில் வசிக்கும் இளவரசுவின் மகள் தான் அனிகா சுரேந்திரன். ஒரு நாள் திடீரென தற்கொலை செய்து கொள்கிறார் அனிகா . அது தற்கொலை அல்ல, கொலை என வழக்கு தொடுக்கிறார் ஆதி. ஆதி வேலை பார்க்கும் பள்ளியின் சேர்மனாக இருக்கும் தியாகராஜன் தான் அதற்குக் காரணம் என்று கூறுகின்றார். நீதிமன்றத்தில் வழக்கில் பொய் சாட்சிகளுடன் தப்பிக்க முயல்கிறார் தியாகராஜன். உரிய ஆதாரங்களை சமர்ப்பிக்க முடியாமல் திண்டாடுகிறார் ஆதி. இதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
பி.டி. சார் என படத்தின் பெயரை வைத்திருப்பதால், ஒரு பள்ளியில் விளையாட்டைச் சுற்றி நடக்கும் கதையாக இருக்குமோ என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், படத்தின் கதை அப்படி இல்லாமல் மாணவிக்கான பாலியல் துன்புறுத்தல், அது தொடர்பான பிரச்சனைகள் என படம் நகர்கிறது. இடைவேளைக்குப் பின் வரும் காட்சிகள் உணர்வுபூர்வமாக இருப்பதால் அதற்கான முக்கியதுவம் அதிகமாகின்றது.

ஆதியை எந்த பிரச்சனைக்கும் போக கூடாது என்று அவரது அம்மா சதிகட்டியம் வங்க அவர் முன்பு என்ன பிரச்சனை நடந்தாலும் அவர் பொறுத்து போய் கொண்டிருக்கின்றார். ஆனால் அனிகாவிற்கு பாலியல் துன்புறுத்தல் நடந்தது என்று கேள்விப்பட்டதுமே ‘சாது மிரண்டால்’ என அம்மா பேச்சையும் கேட்காமல் அதிரடியில் இறங்குகிறார். எப்படியாவது அனிகாவிற்கு நீதி வாங்கிக் கொடுக்க தனது வருங்கால மாமனார் பிரபுவுடன் சேர்ந்து போராடுகிறார். சீரியசான கதை என்பதால் படத்தில் ஆதியின் காமெடிக்கு வேலை இல்லாமல் போய்விடுகிறது.

ஆதியின் காதலியாக காஷ்மிரா பர்தேஷி. ஆதி படிக்கும் பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக இருக்கிறார். ஆதிக்கு ஆதரவாக இருக்கும் ஒரு கதாபாத்திரம். ஆதியின் எதிர்வீட்டுப் பெண்ணாக கதையின் மையக் கதாபாத்திரமாக அனிகா சுரேந்திரன். சமூக வலைத்தள கமெண்ட்டுகள் ஒரு பெண்ணின் வாழ்க்கையை எப்படி நாசமாக்குகிறது என்பதற்கு இவரது கதாபாத்திரம் ஒரு உதாரணம். சமீபத்தில் இப்படி நடந்த ஒரு செயல் ஒரு இளம் தாயின் தற்கொலைக்குக் காரணமாகிவிட்டது. இனியாவது, சமூக வலைத்தளங்களில் கமெண்ட் செய்பவர்கள் எல்லை மீறக் கூடாது என்பதற்கு இது ஒரு பாடம்.
ஆதியின் பெற்றோர்களாக பட்டிமன்றம் ராஜா, தேவதர்ஷினி. காஷ்மிராவின் அப்பாவாக பிரபு. இவர்களை விடவும் அனிகாவின் அப்பா இளவரசுக்கு அழுத்தமான ஒரு கதாபாத்திரம். நீதிபதியாக பாக்யராஜ், அவரது வழக்கமான ஸ்டைலில் நடித்திருக்கிறார். நீதிமன்றக் காட்சிகள் சினிமாத்தனமாக படமாக்கப்பட்டுள்ளன.
ஆதியின் படங்களில் இளைஞர்களைக் கவர சில பாடல்களாகவது இருக்கும். இந்தப் படத்தில் அப்படி எதுவும் இல்லை. பின்னணி இசைக்கு மட்டும் உணர்வுபூர்வமான சில காட்சிகள் அமைந்துள்ளன.

இப் படத்தை பார்த்த ரசிகர்கள் இப் படத்தை பெண்கள் உட்பட அனைவரும் பார்க்கவேண்டிய படம் என்று கூறி வருகின்றனர்.

more news