இந்தியன் 2 ரிலீஸ் எப்ப தெரியுமா?

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் தான் கமல் ஹாசன். இவர் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

ஷங்கரின் இயக்கத்தில் இந்தியன் படத்தில் நடித்து அப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இவ்வாறு இருக்க தற்போது இந்தியன் 2 ரிலீஸிற்கு தயாராகி விட்டது.

இப் படத்தில் நடிகர் கமல்ஹாசன் உடன் காஜல் அகர்வால், ராகுல் பிரீத் சிங், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன.

இந்தியனுக்கு ரசிகர்களால் கொடுக்கப்பட்ட வரவேற்பை விட இந்தியன் 2 இற்கு வரவேற்பு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகின்றது.

இந்தியன் 2 படபிடிப்பின் போதே இந்தியன் 3 இற்கான படபிடிப்புகளும் நிகழ்கின்றன.இந்தியன் 2 இன் படபிடிப்புகள் நிறைவடந்த நிலையில் படம் வெளியாவதற்கு தயாராக இருக்கின்ற நிலையில் இந்தியன் 2 வெளியாகும் போதே இந்தியன் 3 இற்கான டீரெயிலரையும் வெளிவிட போவதாக அறிவிகபாட்டுள்ளது.

இதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாகி விட்டது. மேலும் இப் படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற 1 ம் திகதி நடத்தவுள்ளதாக கூறப்படுகின்றது. அது மட்டுமல்லாது இந்தியன் 2 படம் ஜூலை 12ஆம்  திகதி வெளியாகவுள்ளது.

இது மட்டுமல்லாது இந்தியன் படத்தையும் ரீ ரிலீஸ் செய்ய போவதாகவும் அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இந்தியன் படம் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வரும் ஜீன் 7 ஆம் திகதி வெளியாகவுள்ளது.

more news