வேட்டையை ஆரம்பித்த கருடன்!-இரண்டாம் நாள் வசூல் இத்தனை கோடியா?

சூரி நடிப்பில் கடந்த வெள்ளிகிழமை வெளியான படம் கருடன். இந்த படத்தில் மூன்று நண்பர்கள். கருடன் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

இப் படத்திற்கு சசிகுமாரின் நடிப்பு ஒரு பிளஸ் என்று தான் கூற வேண்டும். அவர் இடத்தில் வேறு யாருமே நடிக்க முடியாது. இப் படம் கதா நாயகனை மையப்படுத்தி எடுக்காமல் கதையை மையபடுத்தி எடுக்க பட்டுள்ளது.

வழமையாக தமிழ் சினிமாவில் கதைக்கு கிரோவை தெரிவு செய்ய மாட்டார்கள். கிரோவிற்காக கதையை எழுதுவார்கள். ஆனால் இந்த படம் அவ்வாறு இல்லை சூரியை வைத்து இப் படத்தை உருவாக்கியது இப் படத்திற்கும் சூரிக்கும் நல்ல வரவேற்பை கொடுத்துள்ளது.

கர்ணா வேடத்தில் நடித்த உன்னி முகுந்தனுக்கு இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றது.

இவ்வாறு இருக்க முதல் நாள் 3.5 கோடி வசூல் செய்துள்ளது. இரண்டாம் நாள் 4.65 கோடி வசூல் செய்துள்ளது. மொத்தமாக இரண்டு நடகளில் 8.15 கோடி வசூல் செய்துள்ளது.

இப் படத்திற்கு பிளூ சட்டை மாறன் கூட நேர்மறையான விமர்சனங்களையே கூறியுள்ளார். இப் படத்தை அனைவரும் தியேட்டரில் சென்று பார்க்கவேண்டும் என்றும் கூறியுள்ளார். அவர் எளிதில் எந்த படத்திற்கும் நல்ல ஈமர்சனங்களை கூறமாட்டார். அவரே கூறியதால் அனைவரும் கட்டாயம் பார்க்கவேண்டிய படமாக இந்த படம்

more news