அத மட்டும் கட் பண்ணாதீங்க!- வெற்றிமாறனிடம் கெஞ்சி கேட்ட விஜய் சேதுபதி!

தமிழ் சினிமாவில் இயக்குனர் வெற்றிமாறன் இன்றியமையாத இயக்குனர். இவர் இயக்கும் படங்களுக்குள் அர்த்தங்கள் நிறைந்த கதைகளே இருக்கும்.

வெற்றிமாறன் பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமார். பின் ஆடுகளம் விசாரணை, வடசென்னை போன்ற படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தி விட்டார். ரசிகர்கள் அதிகம் பேசும் இயக்குனர்களில் இவரும் ஒருவராகிவிட்டார்.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மிகவும் கஷ்டபட்டு சினிமாவிற்குள் வந்தவர். கிடைக்கின்ற சின்ன சின்ன கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்தவர். இன்று இவ்வளவு தூரம் வளர்ந்து விட்டார் என்றால் அதற்கு அவருடைய விடமுயற்சி தான் காரணம்.தென்மேற்கு பருவகாற்றின் மூலம் விஜய்யின் மாஸ்டர் மற்றும் கமாளில் விக்ரம் படத்திலும் வில்லனாக நடித்து பாட்டையை கிழப்பி உள்ளார். நேற்று இவருடைய 50 வது படமான மகாராஜா படம் வெளியானது. இந்த படம் முதல் நாளே ரசிகர்களை கவர்ந்து விட்டது.

முதல் நாள் வசூல் மட்டும் 7 கோடி களை அள்ளி கொடுத்தது. இவருடைய 50 வது படம் வெற்றி படம் என்பது முகள் நாளிலே தெரிந்து விட்டது. இதி நடித்த ஒவ்வொரு நடிகர்களின் நடிப்பும் மிகவும் நன்றாகவே இருந்தது.

வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் விஜய் சேதுபதி மிகவும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பார். இவர் விடுதலை படத்தின் வெற்றிக்கு இவரின் நடிப்பும் ஒரு காரணம் என்றே சொல்லாம். தற்போது விடுதலை 2 இலும் நடித்து வருகின்றார். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கின்றார்.

படாதகட்டில் இவர்கள் இருவரது காதல் காட்சிகள் மிகவும் நன்றாக வந்துள்ளது. இதனால் அதை கட் பண்ண வேண்டாம் என்று விஜய் சேதுபதி வெற்றிமாறனிடம் கேட்டுள்ளார்.

more news