சிவகார்த்திகேயனின் அமரன் படம் வெளியாகும் திகதி!

தமிழ் சினிமாவில் சின்னதிரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்தவர்கள் அதிகம். இப்படிதான் சிவகார்த்திகேயனும் விஜய் டிவியில் இருந்து தமிழ் சினிமாவிற்குள் வந்தவர்.

விஜய் டிவியில் காமெடி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பின் தொகுப்பாளராக பணியாற்றினார்.

அதன் பின்னரே மெரினா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அடி எடுத்து வைத்தார். இவர் ஒரு காமெடி கிரோவாக ஆரம்பத்தில் நடித்து இன்று ஒரு ஆக்ஷன் கிரோவாக மாறி விட்டார். இவருடைய வாழ்வில் திருப்பு முனையாக இருந்த படம் என்றால் அது எதிர்நீச்சல் படம் தான்.

இந்த படம் தனுஷ் இற்கு தான் எழுதப்பட்டது. அப்போது தனுஷ் ஒரு தயாரிப்பாளராகவும் பணிபுரிந்து வந்தார். இந்த கதையை கேட்டதும் உடனே இதை சிவகார்த்திகேயனை வைத்து எடுப்போம் என எடுத்தார். அந்த படத்தின் ஹிட் தான் சிவகார்த்திகேயனின் வளர்ச்சிக்கு பெரும் துணையாக இருந்தது.

இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் அயலான். அது பெரிதாக வசூல் எதுவும் ஈட்ட வில்லை. தனுஷின் கேப்டன் மில்லர் படமும் வெளியானதால் இருபடமும் பெரியளவு வசூல் செய்யவில்லை.

இதற்கு முன் இவர் நடித்த டான் படம் மிக்கபெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தை கல்லூரி மாணவர்கள் அதிகம் கொண்டாடினார்.

இவ்வாறு இருக்க தற்போது அமரன் படத்தில் நடித்ததுள்ளார். இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். ஜி. வி பிரகாஷ் இசையமைக்க கமல்ஹாசன் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் இணைந்து தயாரித்து வருகின்றனர். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கின்றார்.

இந்த படம் வீர மரணம் அடைந்த தமிழ் நாட்டின் இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு எடுக்கபட்டுள்ளது. இந்த படம் வரும் செப்டெம்பர் 27 ம் திகதி வெளியாகஉள்ளதாக கூறப்படுகின்றது.

more news