விஷாலின் திருமணம் பற்றி வெளியான தகவல்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக தமிழ் சினிமாவை சுற்றி வலம் வருபவர் தான் நடிகர் விஷால்.

இவர் செல்லமே என்ற திரைபடத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் முதல் காலடியை வைத்தார்.

இன்றுவரைக்கும் தமிழ் சினிமாவில் தனக்கான ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கிறார்.

தொடர்ச்சியாக வெளிவந்த படங்கள் அனைத்தும் தோல்வியை தழுவிய நிலையில் சமீபத்தில் வெளியாகிய மார்க் ஆண்டனி மிகப் பெரிய வெற்றியை கொடுத்தது.

மார்க் ஆண்டனி படம் ஒரு டைம் ராவல் ஃபோன் பற்றிய கதை. டைம் ராவல் பற்றிய கதை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிக்கொண்டுதான் இருக்கிறது.

இப் படத்தில் நடிப்பின் அரக்கன் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்திருப்பார். அப்படத்திற்கு சரியானவரவேற்பை கொடுத்தது இவரின் நடிப்பு எனலாம்.

விஷால், எஸ்.ஜே.சூர்யா இருவருமே இரட்டை வேடத்தில் சிறப்பாக நடித்திருந்தனர். எஸ்.ஜே.சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்கும் படங்கள் எல்லாம் பெரும் வரவேற்பை பெறும். அது கீரோவாக இருந்தாலும் சரி வில்லனாக இருந்தாலும் சரி.

இவ்வாறு இருக்க விஷாலின் ரத்னம் படம் 26ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகவுள்ளது.

இப் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஷாலிடம் உங்களுக்கு எப்போது திருமணம் என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருமணம் பற்றி பேச்சு எடுக்கும் போதெல்லாம் முதலில் ஆர்யாவுக்கு நடந்தால் எனக்கு என்று சொன்னீங்க, பின்னர் நடிகர் சங்க கட்டிடம் காட்டிய பின்புதான் என்றீங்க பின்னர் சல்மான் கான், பிரபாஸ் எல்லாம் இன்னும் கல்யாணம் பண்ணாம இல்லையா என கேட்டு இருக்கீங்க, திருமணத்தின் மீது ஏன் உங்களுக்கு இவ்வளவு வெறுப்பு என்று கேட்ட போது அவர் ஒரு புன்னகை செய்தார்.

அப்படியே சிரிச்சிட்டு அவர் திருமணத்தின் மீது எனக்கு வெறுப்பு இல்லை, ஒரு பெண்ணுடன் வாழ்க்கை முழுவதும் டிரவல் செய்வது சாதாரண விஷயம் கிடையாது அவங்களுக்கு உணர்வுபூர்வமாக இருக்கணும், அவங்களுக்கான நேரத்தை ஒதுக்கணும், அவங்களுக்கு ஏற்றமாதிரி எல்லாம் இருக்க வேண்டும்.

இதை நான் முடிவு செய்ய முடியாது கடவுள் தான் அதை முடிவு செய்ய வேண்டும். அதற்கான சரியான நேரத்தை கடவுள் எனக்கு தருவார் என்று நம்புகிறேன் என்றார்.

2019ம் ஆண்டு அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு பின்னர் திருமணம் நிறுத்தபட்டு விட்டது. இதனால் தான் அவர் திருமணம் வேண்டாம் என்று இருக்கிறார் என்று ஒரு சில வதந்திகள் பரவி வருகின்றது.

More News