நாட்டுப்பற்று கட்டுரை

naatupatru katturai in tamil

ஒவ்வொரு மனிதனின் அடையாளத்திலும் நாடு என்பது முக்கியமான ஒன்று. காரணம் நம் நாடு தான் எமக்கான தனி அடையாளத்தை உருவாக்குகின்றது. ஆகவே நம் எல்லோர் வாழ்க்கைக்கும் நாட்டுபற்று முக்கியமான ஒன்றாகும்.

நாட்டுப்பற்று கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • நாட்டுப்பற்று என்பது
  • நாட்டுப்பற்றுக்கு உதாரணமாக திகழ்பவர்கள்
  • நாட்டுப்பற்றின் முக்கியத்துவம்
  • நாட்டுப்பற்று அற்றவரின் விளைவும் அதற்கான சட்ட நடவடிக்கையும்
  • முடிவுரை

முன்னுரை

பத்து மாதம் தாய் வயிற்றில் பயணங்களை தொடங்கினாலும் நம் கருவில் இருந்து நாம் இறந்த பின்னும் நல்லதோர் பிரஜையாக எம்மை வாழ வைப்பதும் நமக்காக இருப்பதும் நம் நாடு என்பது உலகறிந்த உண்மை.

அத்தகை நாட்டுக்கு நேர்மையாகவும் உண்மையாகவும் இருப்பது எமது கடமையில் ஒன்றாகும். அந்த வகையில் நாட்டுப்பற்று இக்கட்டுரையில் நோக்கலாம்.

நாட்டுப்பற்று என்பது

ஒரு மனிதன் எந்த சூழ்நிலையிலும் எந்த சிந்தனையிலும் தன் நாட்டை விட்டுக்கொடுக்காது தன் நாட்டை பாதுகாப்பான சூழலில் உருவாக்குபவனே நாட்டுப்பற்று எனலாம்.

மாறாக ஒரு நபரின் குடும்பம், சுற்றத்தார், உறவினர் என அவர்கள் மீது கொண்ட அன்பு போல் அதிகமாக நாட்டின் மேல் வைத்திருப்பதும் நாட்டுப்பற்றாகும். ஒவ்வொரு மனிதனின் செயற்பாட்டிலும் ஒவ்வொரு விதமாக நாட்டுப்பற்றை உணரலாம்.

நாட்டுப்பற்றுக்கு உதாரணமாக திகழ்பவர்கள்

இந்திய நாட்டின் பற்றை மன்னர் ஆட்சி தொடக்கம் மக்கள் ஆட்சி வரை ஒவ்வொரு குடிமக்களாக செயற்பட்டு கொண்டு தான் உள்ளார்கள். இந்திய நாட்டை ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திர இந்தியாவாக மாற்ற தன் உயிர் கொடுத்த தேசப்பற்று வீரர்களின் பல பட்டியல்கள் இங்கு உள்ளன.

அவற்றில் பெண்கள், ஆண்கள் என எவரும் தம் நாட்டை விட்டுகொடுக்கவில்லை. அவற்றில் மருது பாண்டியர்கள், வேலுநாச்சியார், பாரதியார், வ.உ.சி, கொடிகாத்த குமரன், நேரு, காந்தி என இன்னும் பலர் தம் நாட்டுப்பற்றை நிறுபித்து வீரமரணமும் அடைந்து உள்ளார்கள்.

தற்போதைய இந்திய நாடு விண்ணுலகம் வரை பேர் சொல்லும் இந்தியாவாக தோற்றம் பெற காரணம் இந்திய நாட்டின் ஒவ்வொரு குடிமக்களுமே காரணம் ஆகும்.

உதாரணமாக இரவு பகலாக நாட்டை காப்பாற்ற நினைக்கும் இந்திய நாட்டின் இராணுவ படை, காவல்துறை, அத்தியாவசிய தேவைக்கு செயல்படுபவர்கள், உணவுக்காக வயலில் கால் வைக்கும் விவசாயிகள், வைத்தியர்கள், ஆசிரியர்கள் என பல துறைகளில் அவர்களை அர்பணித்து தம் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தி உள்ளனர்.

நாட்டுப்பற்றின் முக்கியத்துவம்

நாம் அனைவரும் இந்திய நாட்டின் மக்கள். எம் கடமைகளில் நம் தேசப்பற்றும் ஒன்றாகும். நம் நாட்டின் மேல் தேசப்பற்றை காண்பதால் நாட்டு முன்னேற்றம் மட்டும் இன்றி ஒரு தனிமனித வளர்ச்சியும் அதில் அடங்கியுள்ளது.

இராணுவ படை தன்னை அர்பணிக்கவில்லை என்றால் நிம்மதியான உறக்கத்தை நாம் பெற்று இருக்க மாட்டோம். ஆசிரியர் தன்னை அர்பணிக்காவிட்டால் நாளைய எதிர்காலமாக மாணவர்களை படைத்திருக்க முடியாது.

மாணவர்கள் தம் கல்வியையும் திறனையும் நாட்டுக்கு அர்பணிக்காவிட்டால் நாட்டின் எதிர்கால தலைவர்களையும், நாட்டின் வளர்ச்சிக்கும் முக்கியம் இல்லாது சென்றுவிடும்.

விவசாயிகள் இவ் நாட்டுக்காக தன்னை அர்பணிக்காவிட்டால் ஆடு, மாடு போல் தரை புற்களை தான் உணவாக உட்கொள்ள வேண்டி ஏற்படும். இதனால் ஒவ்வொரு பிரஜைகளும் நாட்டுப்பற்று இருப்பதனால் தான் நம் இந்திய நாடு தனிப்பட்ட சிறப்பை பெற்று விளங்குகின்றது.

நாட்டுப்பற்று அற்றவரின் விளைவும் அதற்கான சட்ட நடவடிக்கையும்

ஒரு நாட்டுக்கு பூரண சுதந்திரமும் பாதுகாப்பும் தேசப்பற்றினால் தான் அடைய முடியும். ஆனால் இன்று இந்தியா வளர்ச்சி அடைந்த நிலை ஏற்பட்டாலும் மறுபுறம் நாட்டின் பாதகமான விளைவுகளும் அதிகமாகவே உள்ளது. இதன் விளைவாக நாடு படு பாதளத்தில் தான் உள்ளது. நாட்டுப்பற்று இல்லாத ஒருவரால் மட்டுமே நாட்டை சீரழிக்கும் எண்ணமும் ஏற்படும்.

இந்திய நாட்டில் தேசப்பற்று ஒரு சிலருக்கு தான் இருக்கின்றதும் உண்மை. காரணம் போதைப்பொருள் பாவனை, மருந்துகளில் கலப்படம், உண்ணும் உணவில் கலப்படம், பெண்களை பாலியலுக்கு கடத்துதல், சிறுவர்களை கடத்தி உடல் உறுப்புக்களை விற்றல், வேறு நாடுகளுக்கு அனுப்பி வேலைக்கு அமர்த்தல் என பல சீரழிவு நிலை இந்திய நாட்டில் ஒவ்வொரு நிமிடங்களும் நடந்து கொண்டு தான் உள்ளது.

இதற்கு பல சட்டங்களும் உண்டு இருந்து அவை குறைவான தண்டனையாகும். அவற்றிற்கு ஏற்ற தண்டனைகளை வழங்குவதனால் கண்டிப்பாக நம் இந்திய நாடு ஒரு அசுர வளர்ச்சியை அடையும் என்பது உண்மை.

முடிவுரை

எனவே நம் இந்திய நாட்டின் தேசப்பற்று உள்ள ஒரு மனிதனாக ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையும் அமைந்தால் கண்டிப்பாக நாட்டின் பொருளாதார அரசியல் என பல் துறைகளிலும் வெற்றி நிச்சயம். ஆகவே நாட்டுப்பற்று என்பது கண்டிப்பாக எம் கடமையில் ஒன்றாக கருத வேண்டும்.

You May Also Like:

நாட்டு முன்னேற்றத்தில் மாணவர்களின் பங்கு