நாட்டு முன்னேற்றத்தில் மாணவர்களின் பங்கு கட்டுரை

nattu munnetrathil manavar pangu in tamil

இந்திய நாட்டின் தலை சிறந்த கண்டுபிடிப்பு கண்டிப்பாக மாணவர்கள் தான். காரணம் எதிர்காலத்தை எழுத்துப்பிழை இன்றி உருவாக்கும் திறன் கொண்டவர்கள் மாணவர்கள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

நாட்டு முன்னேற்றத்தில் மாணவர்களின் பங்கு கட்டுரை

குறிப்பு சட்டம்

  • முன்னுரை
  • நாட்டின் முன்னேற்றத்திற்கு மாணவர்கள் பங்கு
  • மாணவர்களின் தற்கால துயர நிலை
  • மாணவர்களின் தவறான செயற்பாடு
  • மாணவர்களின் வெளிநாடு இடம்பெயர்வும் அதன் விளைவும்
  • முடிவுரை

முன்னுரை

பல் துறைகளின் வளர்ச்சி பல மொழிகளின் சிறப்பு என பல சிந்தனைகளை கொண்ட அழகிய நாடு நம் இந்திய நாடு. இந்த சிறப்புக்களை அள்ளி தந்த செல்வங்கள் மாணவர்களே.

இன்று விஞ்ஞானம், மெய்ஞானம், விளையாடு, கல்வி என ஒவ்வொரு செயற்பாடும் ஒவ்வொரு மாணவரிடையே இருந்து நாட்டுக்கு கிடைத்த சிறப்புகள் ஆகும். அந்த மாணவர்களின் பங்கு நாட்டு முன்னேற்றத்திற்கு எந்த வகையில் காரணம் என இக்கட்டுரையில் நோக்கலாம்.

நாட்டின் முன்னேற்றத்திற்கு மாணவர்கள் பங்கு

தலைசிறந்த படைப்பை உருவாக்கும் மாணவர்களின் செயற்பாடு நாட்டின் முன்னேற்றத்திற்கும் பாரிய அளவு பங்கு வகிக்கின்றது. இன்றைய சிறார்கள் நாளைய எதிர்காலம் என்பார்கள். சுதந்திரத்திற்கு பிறகு பல ஏழை எளிய மாணவர்களின் வாழ்க்கையை கல்வி எனும் ஒரு சொல் பல திருப்புமுனைகளை ஏற்படுத்தியது.

கல்வி மட்டும் அல்லாது விளையாட்டு துறை, கலை, கலாசாரங்களிலும் தனித்து விளங்குவதற்கு மாணவர்களின் செயற்பாடுகள் அமைந்து உலகநாடுகள் அனைத்தையும் இந்திய நாட்டை திரும்பி பார்க்க வைத்தது.

இன்று பேசப்படும் நிகழ்வு இந்திய நாடு நிலவைத்தொட்டது தான். சதுரங்க விளையாட்டில் உலகரீதியில் ஒரு இந்திய நாட்டு சிறுவனின் வெற்றி என பல உதாரணங்களை கூறலாம்.

இன்று பல விஞ்ஞானிகளை உருவாக்குவதிலும் இந்திய நாடு முன்னிலையில் உள்ளது. அப்துல்கலாம் அவர்களின் கனவு மெய்படும் என்பதை அன்றே கூறியிருந்தார்.

மாணவர்களின் தற்கால துயர நிலை

தொடக்க கல்வி முதல் பல்கலைகழகம் என சென்று இன்று முன்னிலையில் இந்திய மாணவர்கள் உள்ளார்கள். ஆனால் கல்வி தொடர்பில் ஏற்படும் மன அழுத்தம் மாணவரிடையே பாரிய தாக்கத்தை வகிக்கின்றது.

கல்வியை மட்டுமே ஆதாரம் என்று மாணவர்களின் ஏனைய திறனை பெரிதும் சிந்தனை கொள்ளாத பெற்றோர்களின் தவறான புரிதல், அனைத்து மாணவர்களுக்கும் சரிசமமான முன்னிலை வழங்காத பாடசாலைகள், ஏழை மாணவரின் திறன்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காத விளையாட்டு கழகங்கள் என பல பிரைச்சனைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது.

மாணவர்களின் திறமைகள் காணப்பட்டாலும் பணம் என்ற பெயரில் அவர்களின் கனவுகளை உடைக்கின்றனர். அத்துடன் பெண்பிள்ளைகளை பாலியலுக்கு, கனவுகளை நிறைவேற்றுவதாக கூறி சீரழிக்கின்றனர். இவ்வாறு எத்தனையே கண்ணீர்களும் வேதனைகளும் இன்னும் ஏராளம்.

தகுதியுள்ள மாணவனை சாதி என்ற பெயரில் முடக்கும் பல கயவர்கள். இவ்வாறு இன்னும் எத்தனையே தடைகளை கடக்க முடியாமல் இறுதியில் மரணத்தை தேடி செல்கிறார்கள்.

மாணவர்களின் தவறான செயற்பாடுகள்

தனித்து விடப்பட்ட மாணவர்களின் குடும்ப பின்னணிகளை அறிந்து அதனை தங்களுக்காக பயன்படுத்தும் பல கூட்டங்கள் இன்றும் சமூகத்தில் உள்ளனர்.

போதைக்கு அடிமையாக்கப்பட்டு போதைபொருட்களை பாடசாலைக்குள் கொண்டு செல்லும் ஊடகமாக மாணவர்களை பயன்படுத்துகின்றனர், கள்ளப்பண புழக்கத்தை அதிகரிக்க செய்தல், விலைமாதுகளாக வேறு நாடுகளுக்கு செல்லல், என பல தவறான செயற்பாடுகளை மாணவர்களே விருப்பத்துடனும் விருப்பம் இன்றியும் செய்வதற்கு தாயாராக உள்ளார்கள்.

சட்டத்திற்கு புறம்பான செயல் என்ற சிந்தனை இருந்தாலும் பணத்தேவைக்கு இத்தவறான நடவடிக்கையில் மாட்டிக்கொள்கின்றார்கள். இதற்கு காரணம் சமூகம் தான் என்பதும் முக்கியமான ஒன்று.

செய்திகளில் சிறுவர் மரணம், சிறுவன் கைது, பாடசாலை மாணவன் சிறை தண்டனை என்பதை கேட்டு நம் குழந்தைகள் பற்றி மட்டும் நினைக்கும் சமூகம் தானே இது.

ஒரு தடவை அந்த மாணவர்களின் பிண்ணணியை தெரிந்து கொண்டு உதவும் மனப்பாங்கு எவருக்காவது வந்தது உண்டா? இது தான் மாணவரின் தவறான செயற்பாட்டுக்கு காரணம்.

மாணவர்களின் வெளிநாட்டு இடம்பெயர்வும் அதன் விளைவும்

மாணவர்களின் சிறந்த ஆற்றலுக்கு நாடு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆனால் உலக நாடுகள் அதை அறிந்து சிறந்த மாணவர்களை தங்கள் நாடுகளுக்கு சொந்தம் கொண்டாடுகின்றது. இன்று ஏனைய நாட்டு வளர்ச்சிக்கு ஏதே ஒரு வழியில் இந்திய நாட்டு மாணவர்கள் காரணமாக உள்ளார்கள்.

தலைசிறந்த நிறுவனங்களின் முதன்மை பொறுப்புக்களை இந்திய நாட்டு மாணவர்கள் இடம் பதித்து உள்ளார்கள். ஏனைய நாடுகளின் தலைவர்களாகவும் பாராளுமன்ற சபாநாயகராகவும் இந்திய நாட்டு மாணவர்களின் எதிர்காலமாய் இன்று உள்ளது.

ஆனால் நம் இந்திய நாட்டை வளர்க்க தெரியாமல் சிறந்த நாடாக உருவாக்க முடியாமல் இன்று வளர்ச்சி அடையும் பட்டியலில் நம் நாட்டை வைத்துள்ளோம்.

முடிவுரை

எனவே கண்டிப்பாக நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு மாணவர்களின் திறன்கள் தேவையான ஒன்று என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். அதற்கு வாய்ப்புகளை அறிந்து செயற்படுத்துங்கள். மாணவர்கள் எதிர்காலம் உங்கள் கையில் இருக்கலாம். ஆனால் நாட்டின் எதிர்காலம் மாணவர் கையில் என்பதை மறந்து விடாதீர்கள்.

You May Also Like:

நாளைய உலகம் நம் கையில் கட்டுரை

விளையாட்டின் முக்கியத்துவம் கட்டுரை