சிவகார்த்திகேயன் நழுவ விட்ட வாய்ப்பை எட்டி பிடித்த ஆர் ஜே பாலாஜி!

காமெடியன், கதாநாயகனின் நண்பன் போன்ற துணை காதபாத்திரங்களில் நடித்து வந்த ஆர் ஜே பாலாஜி சமீபகாலமாக தன்னுடைய காதபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்தும் மற்றும் கதாநாயகனாகவும் நடித்து வருகின்றார்.

சிவகார்த்திகேயனை எடுத்து கொண்டால் கொடுக்கின்ற தெய்வம் கூரையை பிச்சுக்கொண்டு கொடுக்கும் என்பார்கள். அவருடைய வாழ்க்கையிலும் இதுதான் நடந்துள்ளது. அவருடைய இந்த வளர்ச்சி அனைத்து நடிக்கர்களையும் பொறாமை பட வைத்துள்ளது.

விஜய், அஜித்,ரஜனி இவர்களுக்கு பின் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்றால் அது சிவகார்த்திகேயன் தான் .

குறுகிய காலத்தில் இவ்வளவு வளர்ச்சியா என்று அனைவரையும் ஆச்சரியபட வைத்துள்ளார்.

தற்பொழுது அமரன் படத்தில் நடித்து வருகின்றார்.

இவர் இரட்டை வேடங்கக்களில் பெரிதாக நடித்தது இல்லை. அவ்வாறு நடித்த படங்களில் அதற்கு பெரிதான முக்கியத்துவமும் கிடைக்கவில்லை.

அட்லியின் உதவி இயக்குனரான அசோக் இன் இயக்கத்தில் சிங்க பாதை படத்தில் அப்பா,மகன் என இரட்டை வேடத்தில் நடிக்கவிருந்தார்.

இத் திரைபடத்திற்கு டி இமான் தான் இசையமைக்க இருந்தார். சிவகார்த்திகேயன், டி இமான் ஆகியோருக்கு இடையில் இருந்த பிரச்சனை காரணமாக சிவகார்த்திகேயன் இப் படத்தில் இருந்து விலகி விட்டார்.

சிவகார்த்திகேயன் விலகியதும் இவரின் காதபாத்திரத்திற்காக ஆர் ஜே பாலாஜி மற்றும் கிப் கொப் தமிழா ஆதி ஆகியோரின் பெயர் பரிந்துரைக்கபட்டது. இருப்பினும் இதில் பாலாஜி நடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரிவிக்கபட்டுள்ளது.